பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ஆசிரியரின் வயது பதினெட்டு மாணவர்களில் பத்தொன்பது இருபது வயது உடையவர்களும் இருந்தனராம்! புதுச்சேரியில் அப்போது தங்கியிருந்த இந்திய விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த அரவிந்தர், வ. வெ. சு. ஐயர், டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆகியோருடன் சுப்புரத்தினத்துக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. சுப்புரத்தினம் பாடிய பாடலைக் கேட்டு மகிழ்ந்த பாரதியார், அந்தப் பாடலின் தலைப்பில், :பூரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது' என்று குறிப்பிட்டு, சென்னையில் இருந்த சுதேச மித்திரன் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். சுப்புர்த்தினம் பாரதியாரிடம் கொண்டிருந்த அளவற்ற பற்று காரணமாகவும், , மதிப்பாலும் தம்முடைய பெயரை பாரதிதாசன் என அமைத்துக் கொண்டார். பாரதிதாசன் என்றே கையொப்பமும் இட்டு வந்தார். பாரதிதாசன் பல புனை பெயர்களில் கவிதை, கட்டுரை, தேசீயப் பாடல்கள் எழுதி வந்தார். புதுவை கே. எஸ். ஆர், கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன். K.S. R, K.S. பாரதி தாசன் இப்படியாகப் பல பெயர்களில் எழுதினர்பாரதிதாசன் என்ற பெயரே இறுதியாக நிலைத்து அவருக்குப் புகழைத் தந்தது சிதம்பரம்-புவனகிரிக்கு அடுத்த பெருமாத்தூர் பரதேசி முதலியார் மகள் பழநியம்மாளே 1921ல் திருமணம் புரிந்து கொண்டார்.