பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இந்திய விடுதலை இயக்கம் தீவிரமாக இருந்த காலம். கதர் துணிகளே தோளில் சுமந்து தெருத் தெருவாகச் சென்று விற்பனை செய்திருக்கிருர் பாரதிதாசன் பாரதியாரின் இந்தியா’ பத்திரிகையை அச்சிட்டு வெளியிட இரகசியமாக ஒத்துழைத்திருக்கிருர் பாரதிதாசன் பிரெஞ்சு அரசுக்கு எதிரான நடவடிக்கையில் பாரதிதாசன் ஈடுபட்டார் என்ற குற்றம் சாட்டப்பட்டு, ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை பெற்ருர் பாரதிதாசன். இடைக்காலத்தில் விடுதலை அடைந்தார். தேச சேவகன், புதுவை கலைமகள் தேசோப காரி, தேசபக்தன், ஆனந்த போதினி", 'சுதேச மித்திரன், துய்ப்ளேக்ஸ்', 'தமிழரசு" ஆகிய இதழ்களில் கதை, கட்டுரை, கவிதை K. S பாரதிதாசன் என்ற பெயரில் எழுதி வந் திருக்கிரு.ர். :பூர் மயிலம் சுப்பிரமணியம் துதியமுது என்ற சிறு நூலை 1926ல் பாரதிதாசன் இயற்றினர். கதர் இராட்டினப்பாட்டு' என்ற சிறு நூலையும் 1930ல் இயற்றி யுள்ளார். . பாரதிதாசனுக்கு சரசுவதி, வசந்தா, ரமணி என்னும் மூன்று பெண்களும், கோபதி என்ற ஆணும் பிறந்தனர். கோபதி என்னும் பெயரே பின்னர், மன்னர் மன்னன் என மாற்றம் பெற்றது. சிறுவர் சிறுமியர் தேசீய கீதம்', 'தொண்டர் வழிநடைப் பாட்டு முதலிய சிறிய நூல்களையும் இயற்றியுள்ளார்.