பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 புதுவை முரசு' என்னும் வார இதழை, பாரதி தாசன் ஆசிரியராக இருந்து நடத்தியிருக்கிரு.ர். பூ சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலம்" என்னும் மாத இதழ்-முழுதும் பாடல்களாகவே அமைந்தது. அதன் ஆசிரியர் பாரதிதாசன். அந்த இதழில், விளம்பரம் கூட கவிதையாகவே வெளி வந்துள்ளது. நாடகங்களும் எழுதியிருக்கிரு.ர். பல நாடகங் களுக்கு பாடல்களும் புனேந்திருக்கிரு.ர். இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்னும் நாடகத்தை எழுதினர். பெரியார் ஈ. வே. ரா அவர்க்ள் தலைமையில் அந்த நாடகம் அரங் கேறியது. அதில் குத்துளசி குருசாமி இரணியன கவும் திருவாசகமணி பாலசுப்பிரமணியம் பிரகலாதகைவும் நடித்திருக்கின்றனர், திருமதி குஞ்சிதம் குருசாமி அவர்களின் முயற்சி யால், கவிஞரின் கவிதைகளே எல்லாம் தொகுத்து கடலூர் தி. கி. நாராயணசாமி நாயுடு அவர் களின் பொருள் உதவியால், பாரதிதாசன் கவிதைகள்'-எட்டணு விலையில், 1938ல் வெளி யிடப் பெற்றது. அந்த நூலில் நாராயணசாமி நாயுடுவுக்கு கவிதையாலே சமர்ப்பணம் கூறி யிருக்கிருர் கவிஞர். பெரியார் ஈ. வே. ரா. அவர்களுடைய தொடர் பும், சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற பாவ்லர் என்னும் பாராட்டும் கவிஞருக்குக் கிடைத்தது. குடும்பக் கட்டுப்பாடு பற்றி முதன்முதலில் பாடல் எழுதிய கவிஞர் தமிழ்நாட்டிலேயே பாரதிதாசனேசி.