பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D 44 தமிழுக்கும், தமிழ்ப்பண்புக்கும் நிலைக்களமாக விளங்கும் திருச்சி நகரில், மகாகவி நூற்ருண்டு விழா, பாரதிதாசன் பிறந்த நாள் விழா, பாரதி தாசன் பல்கலைக் கழகத் துவக்க விழா ஆகிய முப் பெரும் விழாக்கள் 1982, ஏப்ரல் 29, 30 தேதி களில் தமிழக அரசின் சார்பாக சிறப்பாக நடை பெற்றன. வெள்ளம் போல் தமிழர் கூட்டம், நகர் எங்கும் அலை பாய்ந்தது. பாவேந்தர் பாரதிதாசனுக்கும் அவரை எழுக நீ புலவன்' என வாழ்த்தி உரைத்த அவரது ஆசான் பாரதிக்கும், தமிழக அர்சு விழா நடத்திப் பெருமை செய்வதைக் காண மக்கள் உவப்போடு திரண்டிருந்தனர். பாட்டுப் புலவர்களுக்கு எடுக்கும் விழா, இசை வல்லுநர் எம். கே. தியாகராஜ பாகவதரின் கலை மன்றத்தில், 29. 4. 82 காலை 9 மணிக்கு பாவேந்தர் நல்லிசையுடன் துவங்கியது. இசை மாமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குமாரர் திரு. சிவ சிதம்பரம் தனது குழு வினருடன் பாவேந்தரின் இசைப் பாடல்களைப் பாடி அரங்கத்தை வயப்படுத்தி விட்டார். விழாவுக்கு வந்திருந்தோரை பூரீரங்கம் சட்ட மன்ற உறுப்பினர் ஆர். செளந்தரராஜன் அவர்கள் வரவேற்று உரை நிகழ்த் திர்ை. மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் எஸ். டி: சோம சுந்தரம் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று உரை நிகழ்த்தினர். மகாகவி பாரதியார் அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள், பாவேந்தர் பாரதிதாசன் அவர் களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை எடுத்