பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த பொருட்காட்சி அனைவரையும் கவர்ந்தது. பாரதியார், பாரதிதாசன் எழுதிய நூல்களும், அவர்களைப் பற்றிய நூல்களும், கடிதங்களும், புகைப்படங்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அரும் பெரும் களஞ்சியமாகத் திகழ்ந்த அந்தப் பொருட் காட்சியை, மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு. கே. ஏ. கிருஷ்ண சாமி அவர்கள் திறந்து வைத்தார். மாண்புமிகு மேலவைத் துணைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் தலைமையில் கவி யரங்கம் நடைபெற்றது. - திருவாளர்கள் மன்னர் மன்னர், ஈரோடு தமிழ் அன்பன், இளந்தேவன், பொன்னடியான், திருமதி ரோகிணி, ஆகியோர் கவியரங்கில் கவிதை பாடினர். மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் டாக்டர் கா. காளிமுத்து அவர்கள் ந்டுவராக இருந்து, பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் எழுச்சியே’’ என்றும் சமுதாய மறுமலர்ச்சியே’’ என்றும் இருவகை விவாதம் கொண்டப் பட்டி மன்றம் நடை பெற்றது. :தமிழ் எழுச்சியே' என்ற பொருளில் திரு. அ.வ. இராசகோபாலன், திருமதி காந்திமதி, திரு. ஜெகந்நாதன் ஆகியோர் வாதிட்டனர். :சமுதாய மறு மலர்ச்சியே' என்ற பொருளில் திரு. சத்திய சீலன், திருமதி அரசு மணிமேகலை, திரு. அறிவொளி ஆகியோர் வாதிட்டனர். :பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் எழுச்சியே' என நடுவர் தீர்ப்புக் கூறினர்.