பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பிற்பகல் நிகழ்ச்சி 3, 30 மணிக்கு திருவையாறு அரசு இசைக் கல்லுரி மாணவியர் பாடிய பாரதி - இசைப் பாடல்களுடன் தொடங்கியது. மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் திருமதி கோமதி சீனிவாசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினர். - மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. எஸ். திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் இளைய பாரதம்' என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. செல்வி சுபா, செல்வன் மோகன சுந்தரம் செல்வி சித்திரா, செல்வன் இராமலிங்கம், செல்வி சீதா லட்சுமி, செல்வன் இரவீந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். திருமதி அ. ரா. இந்திரா அவர்கள் தலைமையில் மகளிர் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் லீலாவதி, திருமதி நிர்மலா சுரேஷ்' திருமதி தங்க அன்புவல்லி, ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாலை 6.30 மணிக்கு எல்லைக் காவல் படைத திடலில் திறந்த வெளி அரங்கில், வண்ண விளக்கு ஒளியில் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதி தாசன் விழா நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தோரை மாண்புமிகு செய்தி, அறநிலையத்துறை அமைச்சர் திரு. இராம. வீரப்பன் அவர்கள் வரவேற்றுப் பேசினர். மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவர் திரு. க. இராசாராம் அவர்கள் தலைமை வகித்து பாரதியார் திருவுருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்றினர். -