பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இந்தப் பல்கலைக் கழகம் இந்த நூற்ருண்டில் தோன்றிய மிகப் பெரிய கவிஞர்-அருஞ்சிந்தனை யாளர்.செயல் வீரர்-பாரதிதாசனின் பெயரைத் தக்க வகையிலே சூட்டிக் கொண்டிருக்கிறது.
புதிய பல்கலைக் கழகமாம் பாரதிதாசன் பல்கலைக் கழகம் உயர் கல்விக்கும் நிலைத்த பணி களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பை உருவாக்கி புதிய களத்தை அமைக்கும். எல்லா ஆடவர்களும் பெண்களும் நல்லவர்களாக இருக்கும் வாய்ப்பைப் பெற்று, திருப்தியுடன், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு வலிமை யையும் முன்னேற்றத்தையும் வழங்க, புதிய சமுதாயத்தை உருவாக்குவதில் நமது நாடு எதிர் கொள்ளும் பிரச்னைகளுக்கு இந்தப் பல்கலைக் கழகம் வழிகாணும்' -

-மேதகு ஆளுநர் சாதிக் அலி அவர்கள் - :இங்கு பாவேந்தர் பாரதிதாசன், பாரதியார் இருவரின் உருவப்படங்களும் திறக்கப்பட்டன. யாருக்குப் பாராட்டுக் கூறுகிருேம் என்று சொல்வதை விட யாருக்கு, நாம் வணக்கம் செலுத்துகிருேம் என்று நினைத்தால் எதிர் காலத்திற்கு நன்மை கிடைக்கும்.' & - ထိို တိံ :ப்ாரதியும் பாரதிதாசனும் யாருக்குச் சொந்தம தமிழ் நாட்டுக்கு மட்டுமா? இந்தியாவுக்கு மட்டுமா? உலகத். திற்கே சொந்தம்! வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு என்று சொல்லிச் சென்ருர், பாரதி. அவர் வாழ்ந்த திருநாடு இது என்கிருேம்'

இளைஞர்கள் அனைவரும் ஜாதி வேற்றுமைகளைக் களையும்படி சொன்னர் பாரதி. அதைத் தொடர்ந்து சொன்னர் பாரதிதாசன்'