பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நிலையை மாற்றி, பொதுமக்கள் லட்சக் கணக்கில் திரண்டு வரும் வகையில் செய்திருப்பது புரட்சித் தலைவர் அவர் களின் சாதனையாகும். பாரதிதாசன் பல்கலைக் கழகம் பல பிரச்சினைகளை ஆய்வு செய்து பலன் காண வேண்டும். சின்னத்தில் உள்ளதுபோல் புதியதோர் உலகு செய்வோம்-என்ற வகையில் அதன் பணி அமைய வேண்டும். -மாண்புமிகு கல்வி அமைச்சர் அரங்க நாயகம் அவர்கள் ઈ, dઠે 6% இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாத கவிஞர்களின் மத்தியில் மக்களைப் பற்றி அக்கறை கொண்டவர் பாரதிதாசன், அவர் புதுயுகக் கவிஞர். பல நாடுகளில் புரட்சிக் கருத்துக்களைச் சொல்லிய தற்காகக் கவிஞர்கள் துரத்தியடிக்கப்பட்டிருக்கிருர்கள். சில நாடுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிரு.ர்கள். ஆனல் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரு கவிஞரைப் பாராட்டும் அரிய நிலைமையை முதன் முதலில் செய்துள்ளது தமிழ்நாடுதான் என்று கூறல்ாம். -மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் கே. ஏ. கிருஷ்ணசாமி அவர்கள் ஃ ஃ 6% அடிமை விலங்கொடித்த வீரராக இந்திய நாட்டின் விடி வெள்ளியாக பாரதி தோன்றினர். கற்பனை நயத்துடன் உண்மைகளைக் கவிதை வடிவாக்கினர். சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த கொள்ளை நோய்களுக்கு அவரது பாடல்கள் மருந்தாக விளங்கியது. . . .