பக்கம்:பாற்கடல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

லா. ச. ராமாமிருதம்


தி.ஜர. எனக்கு குரு. அப்படியென்றால் அவர் என் கட்டைவிரலைக் கேட்கவில்லை. நான் பிடித்துக் கொள்ளத் தன் விரலையும் எனக்குத் தரவில்லை. ஆனால் இந்த குரு சிஷ்ய பாவம் எனக்கு எப்பவுமே பிடிக்கும். எழுத்து, ஸங்கீதம் மாதிரி. ஸங்கீதத்தில் நான் இந்தச் சிஷ்ய பரம்பரையில் வந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையே ஒழிய, நான் தான்தோன்றி, வரப்ரசாதி என்று மார்தட்டிக் கொள்ளுதல் நேர் எதிர். அந்த பாவனையில் ஒரு "க்ளாமர் காண்கிறேன். அதற்காகவே அவரை நான் குருவாக வரித்தேன். விஷயம் தெரிந்தவர். தன் துறையில் சாதனை புரிந்தவர். என்னிலும் நன்கு மூத்தவர். அந்த நாளிலிருந்து 'வாடா'ன்னு அன்புடன், உரிமையுடன் விளிப்பவர். எனக்கு நாளுக்கு நாள் குறைந்துதானே போகிறார்கள்!

ஆகையால் திஜ.ர. என் குரு. அந்த பாவனையே துணைக்குத் தோளைத் தொட்டுக்கொள்ளுவது போல.

என் உத்யோகத்தில் என்னோடு வேலை செய்தவர்கள் இப்போ என்னைத் தாண்டிப்போன பின்னர், பாதி கேலி பாதி வினையாக என்னை 'குருஜி என அழைக்கையில் சந்தோஷமாகத்தானிருக்கிறது.

"வாத்யாரே, உங்கள் சிஷ்யன் ராகவன், தன் பிள்ளை பூணூலுக்கு உங்களுக்குப் பத்திரிகை அனுப்பினானா?”

பத்திரிகை என்ன? வீடு தேடி வந்து அழைத்துச் சென்று வேட்டி அங்கவஸ்திரமே போர்த்தினான்.

"உங்கள் சிஷ்யன் சங்கரநாராயணன்?

டீக்காக உடுத்தும் ஆசாமி. மடிப்புக் கலைவதைக் கூடப் பொருட்படுத்தாது என்னைக் கண்டதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/10&oldid=1532895" இலிருந்து மீள்விக்கப்பட்டது