பக்கம்:பாற்கடல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

லா. ச. ராமாமிருதம்


அப்படித்தான் ஆறுதல் சொல்வார்கள்.

தற்செயலாகச் சம்பந்தி அம்மாள் அந்தப் பக்கம் வந்துவிட்டால், மிகவும் பணிவுடன், ”குழந்தை மனம் கோணாமல் நடந்துகொள்கிறாளா? அவள் உங்கள் வீட்டுச் சொத்து. அப்படி வாய்த்தது எங்கள் பாக்கியம்.”

சம்பந்தி அம்மாள் அதற்கு பதில் சொல்வாளா? உதட்டைப் பிதுக்கிக்கொண்டு ஒரு புன்னகை, அதற்கு என்ன அர்த்தம்?

இந்த நாளுக்கு இது சினிமா டயலாக்.

அந்த நாளின் யதார்த்தத்தில் பாஷையே இதுதான்; புடித்துச் சொல்கிறேன்.

”போகப் போகச் சரியாப் போயிடும்.”

என்ன பொன்னான வார்த்தைகள், மருந்து வார்த்தைகள்! சிந்திக்கச் சிந்திக்க ஔஷதத்தின் ஸ்புடத் தினின்று ஏதோ அகிற்புகை சூழ்ந்து அதில் மணம் மிதக்கிறது.

வெறும் ஆறுதல் வார்த்தைகளா அவை? gigsLDIT வின் தேடலின் முடிவே அதில் அடங்கியிருப்பதாக ஒரு சமயம் தோன்றுகிறது. சத்தியத்தின் நீரோட்டம் அதில் தெரிகின்றது. சீடனுக்கு குருவின் உபதேசங்கள் ஏதேதோ ஜிகினா காட்டுகின்றன.

பொறு.

காத்திரு.

அடக்கு.

வளைந்து கொடு.

அது அது அதன் வேளையில்தான் வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/140&oldid=1533991" இலிருந்து மீள்விக்கப்பட்டது