பக்கம்:பாற்கடல்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

லா. ச. ராமாமிருதம்


சுறுசுறுப்பாக நடக்கிறது. மல்லிகைச் சரங்களும் அமர்க்களமாகச் செலவாகின்றன. தெருக்களில் முன்னிலும் 'ஜேஜே'.

ஆனால் 'நாமகுஸும.’ மதுரையே ஒரு மாதுவாகமனக் கண்ணில் தோன்றினாளே - அவள் இப்போது எங்கே? தேடு தேடு என்று தேடுகிறேன். அவள் கேலிச் சிரிப்புக்கூடக் கேட்கவில்லை.

இத்தனை சாக்கடைகளும் குப்பைகளும் வீதியென்றும் சந்தென்றும் வித்தியாசம் இல்லாமல் எங்கிருந்து வந்தன? தெருக்களின் அன்றைய கம்பீரத்தையும் விசாலத்தையும் இப்போது சந்துகளின் சகதிகளும் நாற்றங்களும் ஆதிக்கம் கொண்டுவிட்டன.

"ஜடாமுனி சந்து எதுவுங்க ?” சந்தில் நின்று கொண்டே, ஒரு ஆளை மறித்துப் பரீக்ஷைக்காகவே கேட்கிறேன். பதில் பேசாமல் போய்க்கொண்டிருக்கிறான். அன்று தம் அவசர ஜோலியையும் விட்டு விட்டு, எனக்கு வழி காண்பிக்கவே வந்தவர் எங்கே போய்விட்டார்? இந்த ஆளும் சொந்த ஊரிலேயே என்னைப் போல் ஜடாமுனி சந்தைத் தேடிக் கொண்டிருக்கின்றானா?

காலையில் ஒரு மணி நேரந்தான் குழாயில் தண்ணீர் வழங்கல், மதுரை மாநகரத்து மக்கள் அத்தனை பேரும் அன்றைய தின முழுத் தண்ணீர்த் தேவைக்குச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கணேஷ் மெஸ்ஸுக்கு எதிரே உள்ள குப்பைத் தொட்டி கொள்ளாமல், பிளாட்பாரத்தில் வழிந்த எச்சில் இலைகளில் மனிதனும், நாயும் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/162&oldid=1534265" இலிருந்து மீள்விக்கப்பட்டது