பக்கம்:பாற்கடல்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

181


அந்தச் சந்துஷ்டியான முகத்தைச் சுற்றி மற்ற அத்தனை இளசுகளும் வட்டம்.

“இப்போ நினைச்சால்கூட எங்களுக்கு ஆச்சரியமாயிருக்குடி. நான் சமைக்கிறேன், காரியத்தை ஒப்பேத்திக் கொடுக்கறேன். கழுதை வயசானவளுக்கெல்லாம் ஏத்துக்கத் தெம்பு வல்லே. நீ பச்சைக் குழந்தை, உனக்கெப்படி அந்தத் தைரியம் வந்தது?“

“அம்மு வாத்து ரத்தம் அவள் உடம்பிலும் ஒடல்லியா? தைரியத்துக்கென்ன குறைச்சல்?”

“அந்தச் சமையலும் என்ன, சின்னப்பொண்ணு பண்ற மாதிரியா இருந்தது? அதெப்படி ஆவேசம் வந்தமாதிரி அப்படி அப்பழுக்கில்லாமல் அமைஞ்சுது? அம்மாப்பெண்ணே, மறுபடியும் அதுமாதிரி நேர்ந்தால் அதேமாதிரி உன்னால் முடியுமா ?”

அம்மா புன்னகை புரிந்தாள். “நான் மறுபடியும் குமரியாவதற்கு வழி சொல், மிச்சத்துக்கு பதில் அப்புறம் சொல்றேன்!”

“பேச்சில் எப்படி மடக்கறாள் பார்த்தியா?”

“அவள் சொல்றது வாஸ்தவம்தானே!“

“அந்த நாள் எல்லாம் திரும்பி வராது.“

“வந்தாலும் அதுமாதிரி, நமக்குத் தெரியாது. இப்பவும் அதைப்பத்திப் பேச, அந்தச் சமயம் ஒரே தரமா நேர்ந்து, அப்புறமும் சமயம் சமயமா நிக்கறது.“

“பெருந்திரு, எத்தனை காலமாக, மூலஸ்தானத்தில் நின்றவிடத்திலேயே நின்னுண்டிருக்கா, அது மாதிரி“

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/187&oldid=1534290" இலிருந்து மீள்விக்கப்பட்டது