பக்கம்:பாற்கடல்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

லா. ச. ராமாமிருதம்


நான் நினைவு வயதை அடைந்தபிறகு எனக்கு அழுகை வருமளவுக்குக் குழந்தைகளும் பெரியவர்களும் அம்மா கூடச் சில சமயங்களில் சேர்ந்துகொண்டு –

அழுதமூஞ்சி சிரிச்சுதாம்
கழுதைப் பாலைக் குடிச்சுதாம்

என்று பாடிக்கொண்டு, என்னைச் சுற்றிக் கும்மி அடிப்பார்கள்.

ன் பெயரில் நான் ராமேசுவர ப்ரஸாதம் என்பதற்கு அடையாளமாக

—ராம நாமம்

—என் தாத்தாவின் பெயர் (ராமசுவாமி) முன் பகுதி

—இந்தக் குடும்ப ஸ்தாபகர் பெயர் (அமிர்தமய்யர்) மூன்றும் சேர்ந்து கொடி கட்டிப் பறக்கின்றன.

என் ஆண்டு நிறைவுக்கு இருநூறு பேருக்குச் சாப்பாடாம், கூடம் கொள்ளவில்லையாம், நாலு பந்தியாம். குடும்பச் சந்தோஷங்கள் இப்படி

கொழ கொழ கன்னே—

அத்தனையும் பால் சதை. கொழ கொழவா? தோசை மாவு பொங்கி வழிந்த மாதிரி தகதகக்கும் சிவப்பு. (சொல்லாமல் இருக்க முடியாது) கன்னச் சதையில் புதைந்துபோன பொத்தான் விழிகள், மஞ்சள் நிற விழிகள் - சொப்பு வாய்க்கடியில் மூன்று மோவாய்கள், நெற்றியில் அடையாக வழியும் மயிர்.

"Ah what a darling child!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/210&oldid=1534313" இலிருந்து மீள்விக்கப்பட்டது