பக்கம்:பாற்கடல்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

பெங்களூரை விட்டுச் சென்னை வந்து சேர்ந்தோம் என்று சென்ற பகுதியில் நான் தெரிவித்துக் கொண்ட சமயத்திலேயே என் வாழ்க்கைப் பிரயாணத்தில் முதல் கட்டம் முடிந்தது. இது சமயத்தில் ஆயக்கால் போட்டு, நான் வந்த தூரத்துக்கு மூச்சு விட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் என்னை ஆற்றிக்கொள்ளத் தோன்றுவது சரியென்று நினைக்கிறேன்.

இந்தப் பதின்மூன்று மாதங்களாக, வரலாற்றில் இன்னும் என் பிள்ளைப் பருவம் தாண்டவில்லை. என் பகைப்புலனை மட்டுமே விவரிப்பதற்கு என்னிடம் இவ்வளவு விஷயம் இருந்ததா? இத்தனையும் என்னிடம் இதுகாறும் எங்கே புதைந்திருந்தன என்பதை நினைக்கையில் திகைப்பாக இருக்கிறது. ஆணவமாக இருக்கிறது. யானெனும் அகந்தை சித்தமிசை குடிகொண்டது; கொள்ளட்டும்; நான் இல்லாமல் நீ இல்லை.

யார் நம்பினாலும் நம்பாவிடினும் சரி, தமிழ் எனக்கு இன்னும் தடுமாற்றந்தான். உதாரணமாக, பகைப்புலன் என்கிற வார்த்தையை வழக்கில் காண்கிறேன். நானும் பயன்படுத்துகிறேன். ஆனால் அதன் முழுத் தாத்பரியம் வியாபகம் என்ன?

வெள்ளைக்காரன் ராஜ்யத்தில் வயிற்றுப் பிழைப்புக் காரணமாகப் பழகிப் பழகி, மூதாதையர் நாளிலிருந்தே ஆங்கிலம் ரத்த ஒட்டத்தில் கலந்துவிட்டது. "இது புரளி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/237&oldid=1533316" இலிருந்து மீள்விக்கப்பட்டது