பக்கம்:பாற்கடல்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

241


எது வரினும் தட்டிக் கழித்துக்கொண்டு மேல் காரியத்தை கவனிப்பவர் இல்லையா?

குறுக்கு வழியென்று நினைத்துப் பள்ளத்தில் வீழ்ந்து மீள முடியாதவர் -

தற்கொலையில் விடுதலையைத் தேடுபவர் -

வெறும் கட்சி வெறியில் சுய தஹனம் செய்துகொள்பவர் –

உயிரைக் கொடுத்தேனும் சுய விளம்பரம் - இப்படி எத்தனைபேர்?

குடி, கஞ்சா, ஹெராயின், ஹவீஷ்; இத்தனையும் பற்றாமல், எதற்காகவென்று தனக்கே புரியாமல் கைலையிலிருந்து குமரி வரை அலைச்சல், முதுகில் ஒரு மூட்டை, சிக்குப்பிடித்த தாடி, சிக்குப்பிடித்த ஆடை, இஷ்டப்படி இன்ப நுகர்ச்சியால் தொங்கிப்போன அங்கங்கள், அதை மறைப்பதில் கூட அசிரத்தை, அலட்சியம். நாடு பூரா எத்தனை ஜீவநதிகள், ஆறுகள், அருவிகள் ஓடியென்ன? ஏரி, கிணறு, குழாய்கள் இருந்து என்ன? இவர்களின் அழுக்குக் கரைய ஸ்நானம் செய்ய இவர்களுக்கு மட்டும் தண்ணீர் இல்லை - இவர்களின் அர்த்தமற்ற திரியல் ஒருவாறு அலுத்தபின் கப்பலிலிருந்து இறங்கியபோது இருந்த நிலையிலேயே (இல்லை, இவர்கள் தங்களுடன் ஏற்றிச் செல்லும் அழுக்கை மறந்தேனே!) மீண்டும் சொந்த நாட்டுக்குக் கப்பலேறும் யுவர், யுவதிகள் –

சாம்பலில் புரண்டெழுந்து உடம்பில் தரையில் புரளும் ஜடாபரத்தைப் பந்தாய்ச் சுருட்டி அக்குளில் வைத்துக்கொண்டு நடமாடும் சாதுக்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/247&oldid=1533337" இலிருந்து மீள்விக்கப்பட்டது