பக்கம்:பாற்கடல்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

259


என்னிடம் வந்து தாதுவைப் பிடித்து இதயத்தில் செவி சாய்த்துக் கேட்கிறாள்; கை துவண்டு விழுகிறது.

என் கைகளை எடுத்து மார்மேல் சேர்த்து வைத்துச் சிலுவையின் குறியில் தன் தோள்களையும் நெற்றியையும் தொட்டுக்கொள்கிறாள்.

அவள் உதடுகள் அசைகின்றன. போர்வையை என் தலைமேல் இழுத்துவிட்டுப் பூச்செண்டை என் பக்கத்தில் வைத்துவிட்டு, அடிமேல் அடி வைத்து வெளியே செல்கிறாள்.

நான் உள் ப்ரக்ஞையின் ஒரே இதழில், உயிர் வெள்ளத்தில் மிதந்து செல்கிறேன்.

எழக்கூடிய கேள்விகள்.

1. வருகிற வருடம் நடக்கப் போவதை இப்பவே எப்படி -

2. கண்ணை மூடிக்கொண்டே, மிஸ் ஹெர்மாயினின் செயல்களை நான் எப்படிப் பார்த்திருக்க முடியும்?—

3. போர்வையை அவள் என் தலைமேல் இழுத்து விட்டபின். மேற்படி மேற்படி.

இந்த இடத்தில்தான் Poetic License பேசுகிறது. கதாசிரியன் தன் கைவரிசையைக் காட்டக் கை கொடுக்கிறது. கதாநாயகனின் உயிர் பிரிந்த பின்னும் அவன் உயிரோடிருப்பது போன்ற பாவனை முறையா? உயிர் பிரிந்தால் பிரியட்டுமே! பிரிந்த பின்னரும் அவனுடைய ப்ரக்ஞை மட்டும் தொடர்வதற்கு இடம் கொடுத்து என்னதான் நடக்கிறது பார்ப்போமே!

ஏதோ போதனா புத்தகத்திலிருந்து நான் படிக்கவில்லை. எழுத்தனுபவத்தில் சொல்கிறேன். கற்பனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/265&oldid=1534346" இலிருந்து மீள்விக்கப்பட்டது