பக்கம்:பாற்கடல்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

279


“உஷ்!” உதட்டின்மேல் கையை வைத்துத் தரையில் சுருண்டு படுத்திருக்கும் உருவத்தைக் காட்டுகிறாள்.

மன்னிப் பாட்டி குறட்டை விடுகிறாள். பாவம் சரியான அசதி,

”ஒரே ஒருவாட்டி!”

அம்மாவின் கண்களில் தயக்கம் தலைகாட்டுகிறது. அடுத்த நிமிஷமே திடம் திரும்பிக் கூடாது என்று தலையை பலமாக ஆட்டுகிறாள்.

தாங்க முடியாத அசதி என்மேல் படருகிறது. திரும்பி என் இடத்துக்கு வந்து கவிழ்கிறேன்.

அழுகை பீரிடுகிறது.

அம்மா, நீ செத்துப் போ.

இரவு வேளை.

தாத்தா - அதான் - அப்பா - அதான் தாத்தா - சரி அப்பா, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். கொத்த மல்லித் துவையல் அடுத்து புடலங்காய் பொரித்த குழம்பு. தாத்தாவுக்கு ரொம்பப் புடிக்கும்.

எங்களுக்கும் புடிக்கும். எங்களுக்குச் சாப்பாடு ஆயிடுத்து.

லாந்தர் வெளிச்சத்தில் தாத்தாவின் வாழை இலையில் துவையல் சாதம் மேல் நெய் பளபளப்பதைப் பார்க்கையில் எனக்கு மறுபடியும் பசிக்கவே ஆரம்பிச்சாச்சு.

ஏன் என் தட்டில் என் சாதம் இவ்வளவு நன்னா இல்லை? என் தட்டில் மாத்திரம் ஏதோ சிதறி, குதறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/285&oldid=1534378" இலிருந்து மீள்விக்கப்பட்டது