பக்கம்:பாற்கடல்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

295


எங்களை அழைத்துப் போக, மாமா ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். இந்த மாமாவோடுதான் நாங்கள்வந்தோம் மாமா. ரொம்பப் பிரியமா எல்லாம் கொடுத்தா!” என்று இன்னொரு ராபனா பண்ணினேன்.

—அண்ணா சொல்லுவார். கழுதைக் குட்டிகூட பிறந்த புதுசில் குதிரைக்குட்டி மாதிரி இருக்கும். அப்புறந்தான், முட்டிக்கால் தட்டி, காதுகள் நீண்டு, வாயைத் திறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். சொந்த மாமா இந்த மாமாவைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனார். ஸ்லாம் போடுவதா, கூப்புவதா? கைகள் தவித்துத் திணறின.

“Hallo, Mr. Halasyam, so you are now in Calicut.”

“Y-Ye-Yes Sir.”

“Nice boys!”

வண்டி புறப்படும் வரை இரண்டு மாமாக்களும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். வண்டி புறப்பட்டதும் மாமி ஜன்னல் வழியே, முடிந்தவரை குனிந்து, என் கன்னங்களைத் தொட்டாள்.

வண்டி வளைவில் மறைந்தபின்னர் கேட்டேன்: ”யார் மாமா அது ? உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா ?”

”அவர் E.E.டா !” Executive Engineer. மாமா draughtsman என்று முன்னாலேயே சொல்லியிருக்கிறேன்.

”என்னுடைய பழைய மேலதிகாரி”

BOSS என்கிற வார்த்தை இன்னும் புழக்கத்தில் வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/301&oldid=1534413" இலிருந்து மீள்விக்கப்பட்டது