பக்கம்:பாற்கடல்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

லா. ச. ராமாமிருதம்


“M”., பரமஹம்சரைக் குறித்து சொல்கிறார் (Gospel of Ramakrishna):

அது சமுத்திரம், அவ்வப்போது நாங்கள் மொண்டு கொண்டது, எங்களால் தூக்க முடிந்த சின்னஞ்சிறு பாத்திரங்களில், எங்களிடம் இருந்த பாத்திரம் கொண்டது அவ்வளவுதான்."

இதேபோல்தான் என் இலக்கிய வன்மையும். முன்னோர்கள் தோண்டி வைத்துவிட்டுப் போன ஊற்றில் இருந்து எடுக்க எடுக்க என் எல்லைகள் எவ்வளவு குறுகியவை என்பதை நாளுக்கு நாள் உணர்ந்துகொண்டே இருப்பதிலேயே ஓர் ஆனந்தம் தெரிகிறது.

கைக்கெட்டமல் அதோ, அவ்வளவு கிட்ட பூமிக்கு அடியில் அதோ தெரியும் புதையல்.

அண்ணாவுக்கு - அதான் அப்பாவுக்கு - அதான் அண்ணாவுக்குக் கதை சொல்ல நேரம் ஏது? (பின்னால் தன் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நேரம் போக, மிச்சத்துக்குக் கதை சொல்லவுமே அவர் முழு நேரமும் செலவழிந்தது. ஆனால் அண்ணா கதை சொல்லும் விதத்தைப் பற்றிச் சொல்ல இப்போது இடம் இல்லை. அவரும் அந்தக் கலையில் 'கில்லாடி'தான். அதற்குச் சமயம் வரும்போது சொல்கிறேன்) இப்போதைக்குப் பள்ளிக்கூடத்துக்கும், டியூஷன் சொல்லிக் கொடுக்கப் போய் வரவுமே நேரம் போதவில்லை. அண்ணாவுக்கு நல்ல சம்பாதனை வேளை. ஆனால் இந்தக் குடும்பம் எத்தனை வந்தாலும் கொள்ளும், அத்தனையும் கொண்டது. தமக்காகச் சேர்த்து வைத்துக்கொள்ளும் எண்ணம் அவருக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/308&oldid=1534420" இலிருந்து மீள்விக்கப்பட்டது