பக்கம்:பாற்கடல்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

லா. ச. ராமாமிருதம்


“உங்கள் பாஷைதான். உங்கள் பாணிதான். ஆனால் கூடவே ஏதோ ஒண்ணு. இடங்கள் புரியவில்லை. ஆனால் புரியாமலும் இல்லை. அதையும் மீறி ஏதோ ஒண்ணு. ரொம்ப Deep ஒரு பவர் - yes, Deep Power, This is Power.”

அப்படி அன்று ஆரம்பித்த கதை முன் ஏற எற, எனக்கும் பலமும் உற்சாகமும் ஊற ஊற, பாராசாரிக் குதிரையும் படியப் படிய, அனுபவம் ஒரு தனிக் குஷியாகத்தான் இருந்தது. விஷயமும் நானும் ஒரு சமயம் ஒருவருக்கொருவர் தோகை விரித்து ஆடினோம்.

The hunter and the hunted. Who is the hunter? Who is the the huneted is not the point.

The hunt is all that matters. Oh! this stalking so thrilling so beautiful!

Fair Copy செய்து - எப்பவும் என் எழுத்துச் சம்பந்தப்பட்டவரை எல்லாமே இதுவரை என் கையினால்தான் - இனி உடல் ஒடுக்கம் என்ன ஆகுமோ? Dictation தட்டெழுத்து என்று எழுத்தாளர்கள் இப்பொழுது கையாளுகிறார்கள். தென்காசியில் ஓரிரு கதைகளை நான் சொல்லக் கண்ணன் எழுதினான். ஆனால் சரிப்பட்டு வரவில்லை. எனக்கு வெட்கமாயிருந்தது - நான் நிர்வாணமாக்கப் பட்டாற் போல்.

Fair Copy செய்து 5-8-1981 அன்று, Register தபாலில் பிரபலமான பெரிய சர்க்குலேஷன் பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பினேன். இங்கு கதையின் லௌகீகப் பகுதி ஆரம்பமாகிறது. காற்றாடி காற்றிழந்து தரை தட்டி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/366&oldid=1534642" இலிருந்து மீள்விக்கப்பட்டது