பக்கம்:பாற்கடல்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

361


னாற்போல எனக்குப் பொதுவாகவே பிடிக்காத பகுதி. ஆனால் சொல்லாமல் முடியவில்லை.

அந்தப் பத்திரிகையின் ஆதரவும் பிரசுரமும் ஏற்கெனவே பன்முறை பெற்றிருக்கிறேன். அது வழங்கும் கூடுதலான சன்மானம் ஒரு பக்கம் இருக்கட்டும். இம்முறை இக்கதை அந்தப் பத்திரிகையின் மூலம் அதிகப்படியான வாசகர்களிடம் சேராதா என்கிற சபலம்தான். ஸ்தாபனம் பெரிசு. ஓரிரு சமயம் நான் அங்கு போக நேர்ந்தபோது, ரொம்பவும் அனுசரணையாகப் பேசுவார்கள். அந்த மரியாதை, வியாபார ரீதியானாலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஆச்சு, ஒரு மாதம், இரண்டு மாதம், டெலிபோனில் நினைவுபடுத்தினேன். ’தலைவரிடம் போயிருக்கிறது’ என்ற பதில். அதுவும் சரிதான். அப்படியானால் கதை ஒரு கட்டம் தாண்டி இன்னொரு கட்டத்துள் புகுந்திருக்கிறது என்று அர்த்தம்.

மறுபடியும் இரண்டு மாதங்கள் கடந்தன. எனக்கு அலுப்பும் ரோசமும் வந்துவிட்டன. 22-12-81 அன்று ஸ்தாபனத்தின் தலைவருக்கு முழு விவரங்களைத் தெரிவித்துக் கதையைத் திருப்பி அனுப்பிவிடும்படி எழுதினேன். அடுத்து அவசர காரியமாக மதுரைக்குப் போய்விட்டேன்.

1982 மார்ச் மாத முதல் வார வாக்கில் கதை திருப்பி வந்ததாக வீட்டிலிருந்து தகவலும், கதையும் தபாலில் எனக்கு வந்து சேர்ந்தன. நானும் மூச்சு விட்டேன். சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பத்திரிகைகளாகட்டும், பதிப்பாளர்களாகட்டும் அவர்களை அதட்டியோ மிரட்டியோ அவர்களுடைய காரியங்களைச் சாதித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/367&oldid=1534643" இலிருந்து மீள்விக்கப்பட்டது