பக்கம்:பாற்கடல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

நான் சிறுவனாயிருக்கையில் ஒருசமயம் சென்னையில் இருந்து லால்குடிக்கு வந்து இறங்கியதும் அன்றே, கேட்கப்போனால் அப்பவே என்று நினைப்பு - என் தகப்பனாரும் நானும் கோயிலுக்குச் சென்றோம். அம்மன் சன்னதியுள் நுழைந்ததுமே அண்ணாவுக்குக் கண் மல்கிவிட்டது. நாத் தழுதழுக்க:

”ராம், லால்குடியில் நம்முடைய ஒரே சொத்து இந்தக் கோயில்தாண்டா, பெருந்திருதாண்டா” அவர் சொன்னது இன்னும் மறக்கவில்லை. இன்னும் எனக்குத் தென்புதான்.

ஆனால் அந்த வயதில் முழுக்கப் புரிகிறதா? ஏதோ தலையாட்டுகிறோம். மறந்துவிடுகிறோம். பிறகு ஏதோ ஒரு நமுநழுப்பு, சந்தேகிக்கிறோம். அத்துடன் சண்டை போடுகிறோம். மறுக்கிறோம். சலிக்கிறோம். பிறகு அடி மேல் அடி விழ, நேரத்துக்கு நேரம் பதமாகி, மெதுவாகி, மிருதுவாகி, உணர்ந்து உருகி, அன்று சொன்னதுதான் இன்றுவரை, என்றுமே நம்மைக் காக்கும் மந்திரம், தாங்கும் தென்பு, நம் தஞ்சம் என்று தெரிகிறோம்.

நாஸ்திகம், ஆஸ்திகம், ஸம்வாதம், இஸங்கள் எல்லாம் கிளம்பி, தலைவிரித்தாடி, எல்லாவிதமான எதிர்மறைகளின் கடையலில் எல்லாம் ஒரு மறையெனும் அமுதம் தோன்றுகையில் என் பாற்கடலின் மறுபெயர் 'பட்டுத்தெறி' என்று புரிந்துகொண்டேன். புரிந்துகொண்டேயிருக்கிறேன்.

கனாக் கண்டாற்போல் ஏதோ நிழலாடுகிறது. நினைப்பில், பெங்களூரில் அண்ணா வேலை பார்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/46&oldid=1533020" இலிருந்து மீள்விக்கப்பட்டது