பக்கம்:பாற்கடல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

லா. ச. ராமாமிருதம்


படுகிறேன் என்று அர்த்தமல்ல. உண்மையைச் சொல்கிறேன். நான் உண்மை விளம்பி"

ஏற்றத்தாழ்வுகளை ஒப்பிட்டுப் பேசுவது பொறாமையல்லேல் வேறு எது பொறாமை ? நான் இன்னும் ஒருபடி மேலேயே போகிறேன். பிறர் வசதிகளைப் பேசத் தோன்றுவதே காழ்ப்புதான் என்று சொல்வேன். பிறரிடம் கண்ட நற்குணங்களைப் பேசுவோம். பெரியாரைப் புகழ்வோம்.

பங்கமிலாது வாழ அந்த வாழ்வு பெற, நாணயமான முறையில், நம் உழைப்பு, முயற்சி பற்றிப் பேசுவோம்.

தங்க அணிலைக் கண்டால், ‘எங்கே புரண்டாய்? என்று விசாரிக்கமாட்டோம். அதன் தோலை உரிக்க என்ன வழி! அதனால்தான் தங்க அணில் கண்ணில் படுவதில்லை.

என்று நாம்,

நம் வீட்டுப் பழையது,
நான் தொடுத்த முழம்,

ஆத்தாளுக்கும் அகமுடையாளுக்கும் அங்கச்சிக்கும் நான் எடுத்த புடவை நூறு புடவைதான். ஆனால் என் உழைப்பு, என் அன்பு, என் சக்தி, எங்கள் கெளரவம், என்று பெருமை கொள்கிறோமோ, வீட்டில் இருப்பவர் எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும். திருப்திப்பட வேண்டும். பெருமைப்பட வேண்டும். இதுவரை தெரியாவிட்டால் இனிமேலாயினும் பழகிக்கொள்ள வேண்டும். ஒன்று தெரிய வேண்டும்; நன்றி பெருகப் பெருக அங்கு சுபிக்ஷமும் பெருகும். அங்கு ராமராஜ்யம் நடக்கிறது. அந்த வீட்டைப் பிதுர்க்களின் ஆசீர்வாதம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அஞ்சலி செய்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/64&oldid=1533294" இலிருந்து மீள்விக்கப்பட்டது