பக்கம்:பாற்கடல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

லா. ச. ராமாமிருதம்


இந்த நியாயம் அன்றிலிருந்தே வழங்கி வருகிறது. அசுவத்தாமா ஹத: (குஞ்சர:) குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் – பல்லவி

தட்டாமான்லத் தாமரைப் பூ
சுத்திச் சுத்திச் சுண்ணாம்பு.
கிட்டவந்தால் குட்டுவேன்
எட்டப் போனால் துப்புவேன்.

ஏகலைவன் குருதக்ஷணையாகத் தன் கட்டை விரலைக் கொடுத்துத் தான் கற்ற வித்தையையும் குருவுக்கே சமர்ப்பித்துவிட்டான். வேறெப்படி அர்ச்சுனன் முகத்தை குரு காப்பாற்றுவது?

அன்றிலிருந்து இன்றுவரை நியாயங்கள் பாற்கடலின் பங்குகளாய்த்தான் நடைபெற்று வருகின்றன. வாழ்க்கையின் நியதியே அதுதான். ஆகையால் சோர்வுக்கு இடங்கொடேல். அது கடலோ, பூமியோ, வானோ - இயற்கைக்கு ஒரு செயல்தான் உண்டு. அது தான் விருத்தி எடுக்க எடுக்கப் பெருக்கம். இறைக்க இறைக்க ஊற்று.

அதற்கென்று ஒரு தனிப் ப்ரக்ஞை இருந்தால்:

"இயங்கிக்கொண்டிருப்பதுதான் என் வழி, என் மெய், என் உயிர், என் உண்மை.

எவ்வளவு எடுத்தாலும் மிச்சம் நான் உண்டு.

எவ்வளவு குறைந்தாலும் உன்னை எனக்கு அடையாளம் தெரியாது.

என்னையே எனக்குத் தெரியாது. எனக்கும் நான் வேண்டாம்.

ஆனால் ஆரம்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/8&oldid=1532893" இலிருந்து மீள்விக்கப்பட்டது