பக்கம்:பாற்கடல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

77


ஜாக்கிரதையாக, சிரத்தையாகச் சேகரித்துக் கொடுத்திருப்போம். வம்சங்கள் கழிந்து ஒரு காலநேமி தோன்றுவான். "இந்த ராமாமிருதம் என்னவென்று நினைத்துச் சரடு விட்டிருக்கிறான்? தமிழ்ப்பண்டிதர் ராமசாமி அய்யரை எங்கள் குடும்பத்துக்குத் தெரியாதா? என் தாத்தாவுக்குத் தாத்தா மாப்பிள்ளை வாத்தியாரிடம் படித்தவர்தானே ?” என்று Capsule ஐத் திறக்கும் முயற்சியில் இறங்கிவிடுவார். உடனே சாக்ஷி, ஸம்மன்ஸ், சவப்பெட்டி திறத்தல், எலும்புக்கூடு ஆராய்ச்சி (ஆமாம்- இல்லை - ஆமாம் வில்வலன் வாதாபி Trick, ‘வாதாபி ஜீர்ணாபி என்று வயிற்றைத் தடவி செரித்துக்கொள்ளுமளவுக்கு நான் அகத்தியனா?) உருவேற்றத்தால் பொய்யே மெய் போலும்மே மெய் போலும்மே. மெய்யே பொய் போலும்மே பொய் போலும் மே. கடைசியில் பொய்யும் மெய்யும் சமுதாயத்தின் Fashionஐச் சேர்ந்தது. வரலாற்றில் இந்தக் கிலிகள் எல்லாம் உண்டு. வரலாறு ஒரு "பேஜாரு, சிலம்பில் சிறு பிழை என்று ராஜபாளையத்திலிருந்து விமர்சனப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. இளங்கோவடிகளுக்கு இடப்பொட்டில் லேசாகத் தலைவலி.

அடுத்தது உரத்த சிந்தனை. எழுத்தில் இதுபோல் ஒரு வெளியீடு, அதற்கேற்ற நடை-இப்போது ஸ்திரமும் ஆகிவிட்டது. அடிப்படையில் இது என் பேத்தி அபிதாவின் தனி உலகம். கூடத்தில் நாற்காலியெதிரில் படுத்து உருண்டவண்ணம் அவள் தனக்கே பேசிக் கொள்ள ஆரம்பித்துவிட்டால் அந்த நாற்காலியே —

ஒருசமயம் T.V.

ஒருசமயம் அப்பாவின் ஆபீஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/83&oldid=1533356" இலிருந்து மீள்விக்கப்பட்டது