பக்கம்:பாற்கடல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

லா. ச. ராமாமிருதம்


ஒருசமயம் Gas அடுப்பு.

ஒருசமயம் ராஜராஜேச்வரி அம்மன் கோயில் கோபுரம்.

ஒருசமயம் அவள் பள்ளியின் பின், விளையாட்டு மைதானம்.

அந்த உலகத்துள் வெளி ஆளுக்கு உரிமை கிடையாது. ஆனால் அவள் உரக்கப் பேசிக்கொள்வதால், அனுமதியில்லாமல் நானாக நுழைகிறேன். அலிபாபா குகைக்குள் அந்தந்த ஆவாஹனத்துக்கேற்றபடி அவள் உரக்கப் பேசிக்கொள்வதால், கேட்டவர்களுக்குக் கற்பனை. ஆனால் அவளைப் பொறுத்தவரை அவள் காணும் உலகம் அவளுக்கு, அவள் எண்ணத்தின் தீவிரத்தில், அவளைச் சூழும் உலகத்தினும் உண்மை பழம்வெள்ளத்தை அடித்துச்செல்லும் புதுவெள்ளம். ஆழத்தில் காலைச் சுற்றிக்கொள்ளும் பவழக் கொடி. இதன் அணைப்பு பெரிது. நனவோடை (Stream of consciousness) aiv6avsT6) ஸ்லாவதர் டாலியின் Surrealism. நான் எனக்காகவே எழுதிக்கொள்கிறேன்’ எனும் வீறாப்பு. இடைக்கோடுகளின் அழிப்பு போகாத ஊருக்கு ஆகாத வழி - இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அது தான் சொல்லிக்கொண்டே போகிறேனே, அத்தனையும் உரத்த சிந்தனை உத்தியுள் அடங்கும்.

எந்த உத்தியை எழுத்தாளன் கையாண்டாலும் சரி, அத்தோடு இணைந்து அதேசமயம் அதைத் தன்னோடு பிணைக்கும் கட்டுப்பாடு, பொறுப்பு, உழைப்பு (discipline) அவன் பாஷைக்கு அத்தியாவசியம். A method in madness. மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை, அபிதா, நாற்காலியில் மாற்றி மாற்றிப் பார்க்கும் உருவங்கள் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/84&oldid=1533357" இலிருந்து மீள்விக்கப்பட்டது