பக்கம்:பாற்கடல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

79


எண்ணத்தின் ஆக்க சக்தியில் அவளுக்கு முற்றும் பொருந்தும். அந்த உலகம் அதன் ஆக்க முறையில் ஸ்ருதி சுத்தமானது. அந்த ஸ்ருதி சுத்தம்தான் எல்லாமே. அபிதாவுக்கு அது சுலபம். பிடிவாதங்களும் அவநம்பிக்கைகளும் கேலியும் நாளடைவில் ஏறி ஏறி முற்றிப் போன நமக்குக் கடினம். சாத்தியமே இல்லையென்று கூடச் சொல்வேன்.

கற்பனை காட்டாறாக ஓடுகிறது என்று சொல்லி விடலாம். ஆனால் காட்டாறும் கரைக்குள்தான் ஓடுகிறது. ஒருசமயம் கரை விரியலாம். உடையலாம். ஆனால் எதுவும் விளிம்பு மீற முடியாது. புதுக் கரைகள். மேடு பள்ளமாகும். பள்ளம் மேடாகும். அவ்வளவுதான். சமுதாயம் தன் இஷ்டத்துக்கு அமைத்துக்கொண்டிருக்கும் ஒழுங்குபாடு வேறு. இயற்கையின் நிரவல்வழி வேறு. பரஸ்பர ஈர்ப்புசக்தியில் காலம் காலம் கற்பாந்த காலமாக அந்தரத்தில் தாம் தனித்தனியாக இயங்கிக் கொண்டு சில கிரகங்கள் மற்ற கிரகங்களைச் சுற்றி வருவதுமே இந்த ஸ்ருதி சுத்தத்துக்குச் சான்று. ஒரு துளி அபஸ்வரம் அடித்தாலும் கவிழ்ந்து மோதி இந்த ஸ்ருதியில் இதுபற்றி உரக்கச் சிந்தனை புரிந்துகொண்டிருப்பதற்கு நாம் இருக்கமாட்டோம். The music of the spheres...

...என்றவுடனே, நெடுநாட்களுக்கு முன் - எனக்குப் பதினைந்து வயது இருக்குமோ என்னவோ - ஒரு ஸங்கீத மையம் ஞாபகத்துக்கு வருகிறது.

மஹாராஜபுரம் விசுவனாத அய்யர் ஸபாவில் ஏதோ ஒரு ராகத்தை விஸ்தாரமாக ஆலாபனை பண்ணிக்கொண்டிருக்கிறார். முன்னணியில் வித்வான்களிலேயே பெரிய புள்ளிகள் உட்கார்ந்து கொண்டிருக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/85&oldid=1533358" இலிருந்து மீள்விக்கப்பட்டது