பக்கம்:பாற்கடல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

81


மோன ஸ்வரங்கள் வேறுண்டு. எழுத்தை நான் பயிலும் விதத்தில் இது என் அனுபவம். அனுபவம் காரணமாக அனுமானம்.

ஸங்கீதம், சிற்பம், ஓவியம், பரதம், எழுத்து, சிந்தனை (ஆம்; சிந்தனைகூடத்தான்) இத்யாதிகள் ஒட்டுக் கலைகள்தாம். சூரிய ஒளி விசிறி விரிந்த VIBGYOR.

இன்று, தேவமனோகரி என்ன, புதுப்புது ராகங்கள், வாயில் நுழையாத பெயர்களுடன் பழக்கத்திலேயே இருக்கின்றன. நன்றாயுமிருக்கின்றன. இல்லையென்று யார் சொல்லுவார்?

ஆனால், அந்த நாளில் இந்த தேவமனோகரி சம்பவம் எங்களுக்குப் பெரிசு.

விழிகளில் பாஷ்பம் பெருக, "அடே விசுவநாதா !”

அப்புறம் அவரிடமே பலமுறை தேவமனோகரி கேட்டிருக்கிறோம். ஆனால் அந்தத் தருணம் கிடைக்குமா? அதுவே எனக்கு இன்னும் நெஞ்சில் மணிக்கூண்டு. என் எழுத்தை ஏற்றுக்கொள்பவர் ஏற்றுக் கொள்ளட்டும். அன்று தேவமனோகரி கேட்டேன். தேவமனோகரி உண்டு. அதனால் நானும் ஒரு ராகம். நான் எனும் ராகத்தின் வெளியீடுதான் என் எழுத்து.

"அடே விசுவநாதா !”

தருணம்.

இந்த வார்த்தை தலைகாட்டிவிட்டது. தருணத்தைப் பற்றித் தனி அத்தியாயத்துக்கே விஷயம் இருக்கிறது. வாழ்க்கையில் தருணங்கள் சேர்ந்துகொண்டேயிருக் கின்றன. அவற்றை வார்த்தைகளில் பிடிப்பது அதன் தனி ஸாகஸம், த்ரில் - அதை இப்போது எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/87&oldid=1533360" இலிருந்து மீள்விக்கப்பட்டது