பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பாம் கடல்

முன்னதாகவே மாப்பிள்ளை வந்த சமயத்தில் பிரயாணத்தைப் பற்றிப் .பிரஸ்தாபித்தாள்: *

மாப்பிள்ளை சம்மதம் கொடுத்துவிட்டார். "அப்படியாளுல் நீங்களும் மீளுட்சியும் புறப்படுகிறீர்களா? தான் எப்படியும் போகலாம் என்று இருக்கிறேன்’ என்ருள் லட்சுமி அம்மாள். - - r -

'போய் வாருங்கள், எனக்கு இப்பொழுது வரச் சரிப்படாது. மீனுட்சியை மட்டும் அழைத்துக்கொண்டு போங்கள்.”

'மீனுட்சி மட்டும் வந்தால் என்ன பிரயோஜனம்? தம்பதிகளா கச் சேர்ந்து ஸ்நானம் செய்தால்தான் பலன் உண்டு."

"நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. நானும் மினட்சியும் இன்னும் கிழவர்கள் ஆகிவிடவில்லை. இன்னும் பத்து வருஷம் இப் படியே இருந்தால் ஜோடியாகப் போய் வருகிருேம்” என்று சிரித் தார் சுந்தரம்,

"சரிதான், போங்கள் பேச்சு ரொம்ப நன்ருயிருக்கிறது!" என்று பொய்க் கோபம் காட்டிகுள் மீளுட்சி.

'அப்படியாளுல் நான் மட்டும் புறப்படுகிறேன்" என்று முடித்து நழுவிவிட்டாள் லட்சுமி அம்மாள்.

"நாமும் போய்வரலாமே" என்று கெஞ்சிளுள் மீளுட்சி. "இதோ பார், மீளுட்சி, எனக்கு மூச்சுவிடக்கூடப் பேர் தில்லை. இந்தா, இந்தச் சவுக்கத்தை வைத்துக் கொண்டு ஸ்நானம் リエ」。** - -

"ஐய! இந்தச் சவுக்கம் ஸ்நானந்தான் செய்யும். என் கூடப் பேசி நடந்து வருமா? சாப்பிடுமா?" - - -

"சரிதான். உனக்குப் பதினைந்து வயசிலேயே பாப்பா வேண்டு மென்று ஆசை வந்துவிட்டது. இல்லாவிட்டால் என்னே ஏன் இப்படி விடேன் தொடேனென்று வம்பு செய்கிருய்?"

இதை அவர் சிரித்துக்கொண்டே சொன்னர்.

மீனுட்சியை வெட்கம் கவ்விக்கொண்டது. வெட்கம் எரிச்சலாக மாறியது. அப்படியா சொல்லுகிறீர்கள்? சரி, நீங்கள் வரவேண் டாம். தனியாகவே போய்விட்டு வருகிறேன். ராமேசுவர ஸ்நானம் என்று பேர்தான். மதுரை மீனுட்சி கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம் இவற்றையெல்லாம் நாம் எப்போது பார்ப்பது? அத்ற்காகச் சொன்னல் என்ன என்னவோ சொல்கிறீர்களே!

'தான் ஒன்றும் குற்றமாகச் சொல்லவில்லை. இப்பொழுது எனக்கு வேலை அதிகம். நீ பார்த்துவிட்டு வா; அவ்வளவுதானே?" என்று சொல்லி வெளியே போய்விட்டார் சுந்தரம். -