பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயும் மகளுமாக ராமேசுவர வாத்திரை செய்ததன் பயனுக ஒரு வருஷத்துக்குள்ளே சுப்பு பிறந்தான். அவன் பிறந்த வேளே நல்ல வேளை, சுந்தரம் தொட்டதெல்லாம் தங்கமாயிற்று.

வருஷ்ங்கள் பதினேழு உருண்டோடிவிட்டன. சுப்பு காலேஜில் முதல் வருஷம் பி. ஏ. படித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது தான் மதுரை வக்கீல் குப்புசாமியும், வியாபார நிமித்தமாக மதுரைக் குப் போன சுந்தரமும் சந்தித்தார்கள். அவர்கள் பழக்கம் நீடித் தது. படிப்பாளியான மாப்பிள்ளையை விரும்பிய குப்புமாமி ஐயர், தம் பெண் சரஸ்வதியைச் சுப்புவுக்குக் கொடுத்துக் கல்யாணம் செய்தார். - -

ஏழெட்டு மாதங்கள் சந்தோஷ்மாக ஓடின. "மீளுட்சிக்கும் பிள்ளை பிறந்த வேளை பெருமையைத் தேடித் தந்தது; நாட்டுப்பெண் கால்வைத்த வேளே கஷ்டத்தின் மேல் கஷ்ட்மாக வருகிறது’ என்று ஊரார் பேசிக்கொள்ளும்படி பல சந்தர்ப்பங்கள் நேர்ந்தன.

திடீரென்று லசுட்மி அம்மாள் மூன்றே நாள் ஜூரமாகப் படுத்து இறந்தாள். வீட்டுப் பொறுப்பும் அநுபவமும் நிறைந்து, பெரிய துணேயாக இருந்த தாயை இழந்த மீளுட்சி, இறகொடிந்த பட்சி யாகிவிட்டாள். -

சுப்புவுக்குப் பி. ஏ. இரண்டாம் வருஷம் தொடங்கியது. பெத் ருேர் கீறிய கோட்டைத் தாண்டாத சாதுப்பிள்ளேயாக இருந்த சுப்பு, இப்பொழுதெல்லாம் தன் மனம் போனபடி அலேயத் தொடங்கிவிட்டான். இரவு எட்டு மணிக்கும் ஒன்பது மணிக்குத் தான் வீட்டுக்கு வருவான்.

ஒரு நாள் வியாபார விஷயமாக வெளியூர் போய் வந்த சுந்தரம் வாட்டத்துடன் உள்ளே நுழைந்தார். எப்பொழுதும் மீனு மீனு: என்று பலக்கக் கூப்பிட்டுக் கொண்டே உள்ள்ே வரும் சுபாவம் உள்ள அவர், வந்த சுவடு தெரியாமல் மாடிக்குப் போய்விட்டது, அவளுக்குக் குழப்பத்தை உண்டாக்கியது. கையில் பலகாரமும் தீர்த்தமும் எடுத்துக்கொண்டு மாடிக்குப் போளுள். ஒருக்கணித் துப் படுத்திருந்த அவர் இவளேக் கண்டதும் கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டார். . -

"ஐயோ, இதென்ன, விளேயாடுகிறீர்களா அல்லது கோபமா?* என்று அவர் கையை விலக்கினுள் மீட்ைசி. அவர் முகம் பேயறைந் ததுபோல் இருந்தது. இவள் பேச்சைக் கேட்டதும் கோபமாக மாறியது.

"ஆம், விளையாட்டுத்தான். அழகான பிள்ளையைப் பெற்று விட்டு, விளையாடத்தான் வேண்டும்; வயிறு கொதிக்கிறது: மானம்