பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமகேது . - 2 I

சற்று நேரத்திற்குப் பின் முதலில் தெளிவு பெற்ற பாகீரதி சரேலென்று சுப்புவை வாத்லல்யத்தோடு தோளைப் பிடித்து எழுப்பினுள். 'அப்பா, குழந்தை, எழுந்திரு. நடந்தது நடந்து விட்டது. அது போன ஆரம்பத்தில் நான் எவ்வளவோ கஷ்டப்பட் டாலும், பின்னுல் தெய்வம் எனக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. பாவம்! உன் தாய் மீளுட்சி நிரபராதி. அவள் அம்மாவை மீறி என்ன செய்ய முடியும்? ஒன்றுக்கும் கவலைப்படாதே, அப்பா. இவ்வளவு நல்ல மனுவியான மீனுட்சி பட்ட கஷ்டங்களை நினைத் தாலே மனம் நடுங்குகிறது. அவள் மகளுன உனக்கு ஒரு குறைவும் வராது’ என்று மனப்பூர்வமாகக் கண்ணிரும் கம்பலையுமாக ஆசி வதித்தாள். .

"இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கீழே இருந்த நகைப் பெட்டியை எடுத்துச் சுப்பு பாகீரதியம்மாளிடம் நீட்டினன். -

பாம்பைக் கண்டவள் போல் பின் வாங்கிய பாகீரதி அம்மாள், "அப்பா, அதை நான் இனிமேல் கையாலும் தொட மாட்டேன். இவ்வளவு கஷ்டங்களேயும் பட்டு இதைத் திருடி மறைத்த பாவத் தைக் கழுவிய உன் அம்மாவுக்கும் உனக்குந்தான் இது இனிமேல் சொந்தம். எங்களுக்குப் பகவான் எந்தவிதமான குறையும் வைக்க வில்லை. இதை உன் மனைவியின் கழுத்தில் போடு. நான் சொல்வதைக் கேள்” என்ருள் பாகீரதி, - .

"இதை நினைத்தாலே என் நெஞ்சு நடுங்குகிறது. இதனுல் தாங்கள் பட்ட கஷ்டங்கள் ஏழு தலைமுறைக்கும் போதும். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் இனிமேல் எனக்கு வாழ்வு!’ என்று மீண்டும் சுப்பு, நகைப் பெட்டியைப் பாகீரதியின் காலடியில் வைத்தான்,

திடீரென்று ர்ாமநாதன் குனிந்து நகைப் பெட்டியை எடுத்து, "அம்மா, இன்று ஆடி வெள்ளிக்கிழமை. இன்று இதைப் பார்வத வர்த்தனி அம்மனுக்கு அர்ப்பணம் செய்துவிடலாமே, அவள் ஏற்றுக்கொண்டு இரண்டு குடும்பத்தையும் வாழ வைக்கட்டுமே” என் மூர், - - - -

கோயிலிலிருந்து அடித்த மத்தியகால மணிச் சத்தம் டாண் உாண் என்று கேட்டது. .