பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 . பாற் கடல்

அடுக்களேயில்தான் செல்லம்மா படுப்பது வழக்கம். இருபது வருடமாக அந்தக் குடும்பத்தோடு ஒட்டிப்போன ஜீவன். கிழவர் கண்விழிக்கும் தறுவாயில் எழுந்திருந்து வென்னிர் அடுப்பைப் பற்ற வைத்து அடுக்களே அடுப்பையும் மூட்டுவாள். -

இன்று என்ன, எல்லாம் விபரீதமாக யிருக்கிறது. செல்லம்மா வும் எழுந்திருக்கவில்லையே.

கிழவர் அடுக்களைக் கம்பி வலைமேல் லாந்தரைத் தூக்கிப் பார்த் தார். வழக்கமாகப் படுத்திருக்கும் இடத்தில் செல்லம்மாவைக் காணவில்லை. அப்பொழுதுதான் கிழவருக்கு நினைவில் தட்டிற்று. பிரசவ அறையில் படுத்திருப்பாள். பாவம், செல்லம்மா, தன் வயிற் றுப் பெண்ணுக்குப் பார்ப்பதுபோல் பார்த்தாள். கோயிலில் வைத் துக் கும்பிட வேணும், செல்லம்மாவை, அவளுக்காகத்தான் கோமதி நேற்று தப்பிப் பிழைத்தாள். ஆமா. அந்த மாராசிக் காக, அவள் கைராசி அப்படி; டாக்டரே மேலும் கீழும் பார்க்க ஆரம்பித்து விட்டாரே. பகவானே, எனக்கு அபகீர்த்தி தேடித் தர்ாதே. என்னே இந்த வீட்டைவிட்டுத் துரத்திவிடாதே’ என்று செல்ல்ம்மா புலம்பிளுளே, அந்தப் புலம்பலுக்குச் செவிமடுத்து அபகரித்த உயிரை திரும்ப தந்துவிட்டது தெய்வம். ஒவ்வொரு தடவையும் இந்தப் பாடுதான் கோமதிக்கு. டாக்டர் தான் வர வேண்டும். ஆயுதம்தான் போட வேண்டும். ஒவ்வொரு தடவை: யும் போச்சு போச்சு’ என்றிருக்கும். பன்னிரண்டு மணிக்குள்ளாக டாக்டர் நாலுதடவை வரும்படியாகி விட்டதே. ஒரு மட்டும் ஒரு மணிக்குக் குழந்தை இறங்கி வந்தது. ரத்தக் கசிவு ஜாஸ்தியாம். இரண்டு கையையும் மாறி மாறிச் சல்லடையாகத் தொளைத்துவிட் டார்கள். இன்னும் ஒரு வார்த்துக்கு இமைக்குள் வைத்துப் பார்க்க வேண்டுமென்று சொல்லிவிட்டான் டாக்டர். யார் பார்க்கப் போகிருர்கள் இமைக்குள் வைத்து? பெற்ற தாயை மாடியில் உட் கார்த்தி வைத்திருக்கிறது. ஐந்து வருடமென்ன, அதற்குமேலுமிருக் கும். துரதிர்ஷ்டம் பிடித்தவள். பிரசவ வேளையில்கூட பெற்ற பெண் பக்கத்திலிருந்து வயிற்றைத் தடவக் கொடுத்துவைக்கவில்லை. ம்...இப்பொழுது இவள் எழுந்திருக்கவேண்டுமே...எழுந்திருப்பது என்ன? எழுப்பிவிட்டுத்தானே கீழே உட்காருவாள் செல்லம்மா... பச்சைக் குழந்தை வீலென்று கத்திற்று. கிழவர் சிரித்துக் கொண்டார். சம்முகம் கட்டிடத்தின் வலதோரமாக விறுவிறு என்று வருவதைப் பார்த்துவிட்டுக் கட்டிடத்தின் இடதோரமாக நகர்ந்தார் கிழவர். அவளுகக் கண்டுபிடிக்கிருளு என்றுதான் பார்ப்போமே... .

கொய்யா மரத்துக்கும் பலா மரத்துக்குமிடையே இருக்கும் தேன் கூட்டுக்கு முன்னுல் வந்ததும் கிழவர் தலையைத் தூக்கிப்பார்த் தார். கட்டிடத்தின் அந்த இடத்தில் கீழே ஒரு பெட்ரூமும், மாடி யில் ஒரு பெட்ரூமுமிருந்தது. கீழறையில்தான் தலைக்கு நாள் நடு