பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடாரி £o

நிசியில் கோமதி ஐந்தாவது பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருந் தாள். மாடியறைதான் பல ஆண்டுகளாகக் குஞ்சம்மாளுக்கு உல கம். குஞ்சம்மா கட்டிலேயொட்டி ஒரு சாளரம். அப்பொழுது சாளரக் கதவு சாத்தியிருத்தது.

கிழவர் கோமதிபடுத்திருந்த அறைப்பக்கமாக வந்து சன்னலின் ஒரு_பகுதியைத் திறந்தார். திறந்த இடத்தில் கோமதியின் முகம் தெரிந்தது. சன்னல் விளிம்பில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத் ததுபோல் முகத்தில்மட்டும் பிரகாசம் பரவிற்று. அறைக்குள் அப் போழுதும் இருள் சன்னமாகத் தேங்கிக் கிடந்தது.

கோமதி கைகளைக் கட்டியபடி தூங்கிக்கொண்டிருந்தாள். இமைகள் பெரிதாய் சாத்தியிருந்தன. இரண்டு நிமிஷம் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். தலைக்கு நாள் மாலையில் பின் வராண்டாவில் தலையைக் கோதிக்கொண்டிருந்த பெண் தாகு இவள்? கிழவரால் நம்ப முடியவில்லை, என்ன மாற்றம் ஒரே இரவில் குழந்தை மாதிரியாகிவிட்டதே முகம். முகத்தில்தான் என்ன பேதைமை. . -

கால் மாட்டில், கட்டிலேச் சற்றுத் தூக்கி வைத்திருந்தது. மீண் டும் குழந்தையின் சிணுங்கல் கேட்டது. . . -

'கோமதி' என்று ரகசியமாகக் கூப்பிட்டார் கிழவர். கோமதி அதிர்ச்சியடைந்து கண்விழித்ததைப் பார்த்தபொழுது தான், கூப்பிட் டெழுப்பியிருக்க வேண்டாமென்று எண்ணிஞர் கிழவர். - - .

"என்ன தாத்தா, என்ன?’ என்று பதறிஞள் கோமதி,

'ஒண்னுமில்லையம்மா. சும்மாத்தான். பசுவுக்கு வலியெடுத்

திருக்கு’ என்ருர் கிழவர்:

குழந்தையின் சிணுங்கல் அழுகையாயிற்று. "மாமீ. மாமீ" என்று கூப்பிட்டாள் கோமதி. .

செல்லம்மா, செல்லம்மா” என்று கூப்பிட்டார் கிழவர். . தான் சொன்னது கோமதியின் காதில் விழவில்லையோ என்று சந்தேகப்பட்டதுமாதிரி மீண்டும் ஒரு தடவை, "பசுவுக்கு

நோவெடுத்திருக்கு, இன்னும் ஒரு மணி நேரத்தில் கன்று போட்டு விடும்’ என்ருர்.

கோமதியின் முகம் சிலமாதிரியிருந்தது. - - செல்லம்மா எழுந்திருக்கும் ஓசை கேட்டது. அறையுள் ஒளி பரவிற்று. கட்டில் பக்கம் வந்தாள் செல்லம்மா. கை நிறைய வைக் துக்கொண்டிருந்த வெண்மையான துணிகளிடையே, வெண்மை யான இரு கால்களைக் கண்டார் கிழவர். உதட்டோரம் கன்னம்