பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடு பாற் கடல்

கிழவர் தேன் கூட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு ஈயாகக் கூட்டின் முற்றத்திற்கு வந்து, ஒரு கணம் தயங்கிவிட்டு சட்டென்று உயரப் பறந்தது. - X- - கிழவர் தேனியைப் பார்த்தப்படியே தலையைத் தூக்காமல் மெல்லிய குரலில் சொன்ஞர்:

"இந்தத் தடவையாவது கிடாரி போடும்னு நினைக்கிறேன். ஈச்வர சங்கல்பம் எப்படி இருக்கோ தெரியலே.” -

"அதிர்ஷ்டம் கெட்ட பெண். வரிசையா நாலு பெண் பிறந் தாச்சே. போராதோ? இந்தத் தடவையும் இப்படியாகும்னு நான் தினேக்கவே இல்லை. நேத்து ரா முச்சூடும் கண்ணேக் கொட்டலே தான். அது பிறந்த வேளே. தலையெழுத்துக் கட்டை, யார்தான் என்ன செய்ய முடியும்?” என்ருள் குஞ்சம்மா. .

. "இதுவரையும் பிறந்த ஒரு கன்னேயாவது வீட்டேட்ாடெ வச்சுக்கலை. தவிட்டு விலைக்குப் பத்திண்டு போச் சொல்லிட்டார் மாப்பிள்ளை. எனக்குத்தான் வயத்தெ எரிஞ்சுது. எதிரே நின்னு: ஒரு வார்த்தை சொல்ல முடியுமோ? துர்வாசர் சதா மூக்கிலே நின்னுண்டிருப்பர். 'காளேங்கன்னே வச்சுண்டு சாணம் வாரிண் டிருக்க போறேரோ'ன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டா வாயடைச்சுப் போயுடுமே, என்ன செய்வே சொல்லு? வாஸ்தவந்தானே? நமக் கென்ன வயலா, கரையா, வண்டியா? ஆளுல் இந்தத் தடவை நான் சொல்றேன் குஞ்சம்மா, நீ வேணுப் பாத்துக்கோ, எப்படியப்பா இப்படிச் சொன்னேர், பொட்டுப் போட்டாப்லெ’னு கேக்கப் போறே. கிடாரிதான் பிறக்கப் போறது. ஆமாம், கிடாரிதான் பிறக்கப் போறது” என்ருர் கிழவர். ,

"நான் ஒண்ணெச் சொல்றேன், நீர் வேறெதையோ சொல்றேரே?” என்று கேட்டாள் குஞ்சம்மா. - கிழவர் அதற்குப் பதில் சொல்லவில்லை. தேன்கூடு வாசலையும், மங்கி எரிந்து கொண்டிருந்த லாந்தரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டார். . . - - கிழவர் இரண்டு எட்டு வைத்து விட்டு தலையைத் திருப்பிப்

பார்த்த பொழுது குஞ்சம்மா தலையைக் காணவில்லை.

‘குஞ்சம்மா, குஞ்சம்மா’ என்று மீண்டும் இரு தடவை கூப்பிட்டதும் மாடியில் தலை முளேத்தது. - -

“டப்ப காலி" என்றர் கிழவர். - - "ஒமப்பொடி பிழிஞ்சிருக்கு, போட்டுத் தரச் சொல்றேன்." கிழவர் தலையைச் சரித்துக்கொண்டு யாருக்கோ சொல்வது போல் சொன்ஞர். - - . . . - -