பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாம் கடல்

இருந்தான். செல்லம்மாவிடம் நல்ல ஒட்டுதல். அவனுடைய அப்பா சீட்டாட குற்ருலம் சீசனுக்குச் சென்றிருந்தார்.

குழந்தைகளில் பங்கசமும் வெங்குவும் ஒரு ஜோடி சேர்ந்தே திரிவார்கள். சச்சுவும் க ைகமும் மற்ருெரு ஜோடி. -

வெங்கு, பிறந்த மேனிக்கு பங்கசம் பின்னல் திரிந்துகொண் டிருப்பான். அரையில் துணியோடு அவனேத் பார்க்க முடியாது. நீஜாரைப் போட்டால் மறுகணம் அதை அவிழ்த்துத் தோளில் போட்டுக்கொண்டு விடுவான். அப்படி யிருப்பதில் அவனுக்குப் பேரானந்தம். அதோடு அவனுடைய இரட்டைமாடி பஸ்ஸை அரைஞாணில் கட்டிக்கொள்ளவும் நிஜார் போடுவது இடைஞ்சலாக இருந்தது. -

குழந்தைகள் நால்வரும் தலேக்கு நாள் இரவு, வேதனேக் குரலேயும், அலறலையும் கேட்டபடியே தூங்கியவர்கள். ஏழு மணிக் கெல்லாம் இடுப்புவலி எடுக்க ஆரம்பித்து விட்டது. அதற்கு முன்னலேயே அம்பிப் பாப்பா பிறக்கப் போகிறது என்ற பேச்சு அடிக்கடி அடிபட்டுக் கொண்டிருந்தது.

அறையிலிருந்து கிளம்பிய ஒலம் அலை அலையாய் வீடு முழுவதும் பரவிற்று. குழந்தைகள் இருளடித்த முகத்தோடு வளைய வந்தன. அவச்ரமாக அங்குமிங்கும் பாய்ந்து கொண்டிருந்த பெரியவர்களே வழியில் இடைமறித்துப் பேசவும் முடியவில்லே அவர்களால்.

பங்கசமும் வெங்குவும் சாத்தியிருந்த அறைக் கதவு முன்னுல் நின்று செல்லம்மா மாமி வருகிருளா என்று காத்துக் கொண்டிருக் தனர். இரண்டு தடவை நர்ஸ் வெளியே வந்தபொழுதும் மஆலயாளத்தில் பேசி விரட்டிவிட்டாள். அவள் கண்முன்னல் விலகிக்கொண்டு, உள்ளே மறைந்ததும் பழையபடி கதவண்டை வந்து நின்றுகொண்டார்கள், குழந்தைகள்.

காலால் கதவைத் தள்ளிக்கொண்டு ஒரு பெரிய பேலின்’ பாத்திரத்தைக் கையிலேந்தியபடி பிரத்தியகூஷமாளுள் மாமி.

இரண்டு குழந்தைகளும் பின்னல் சென்ருர்கள். அம்பிப் பாப்பா பிறந்தாச்சா மாமீ?" என்று கேட்டாள் பங்கசம். - ... - -இன்னும் பிறக்கிலடி, நீங்க ரெண்டுபேரும் படுத்துண்டு துங்குங்கோ, காலம்பற அம்பிப் பாப்பாவைக் காட்டறேன்.கே என்ருள் மாமி. - - -

உடனடியாகக் குழந்தையைப் பார்க்கலாமென்றுதான் வெங்கு எண்ணியிருந்தான். மாமியின் பதில் ஏமாற்றமாக இருந்தது. அவன் கிழவி மாதிரி முகத்தைக் வைத்துக் கொண்டான். மாமி ஏமாற்றத்தைப் புரிந்துகொண்டு சொன்னுள்.