பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடாரி - 5

டேய், பங்கசத்துக்கு அம்பிப் பாப்பா பிறக்கும். நாளேக்கு வாயச முண்டு.” - , ,

"பால் பாயசமா?" என்று கேட்டான் வெங்கு.

"ஆமாம், பால் பாயசம் தான். நிறைய சர்க்கரை போட்டு” என்ருள் மாமி. - -

பங்கசம் படுக்கச்சென்ருள். வெங்குவும் பின்னுல் சென் மூன். படுத்ததும் துங்கிப் போளுர்கள் இருவரும். -

அம்பிப் பய8லப் பார்த்துவிட்டுத்தான் துரங்குவது என்று கங்கணம். கட்டிக்கொண்டதுபோல் கண்ணேக் கசக்கியபடியே வளேய வளைய வந்தார்கள் சச்சுவும், கனகமும். கோமதி அலறுகிற போழுதெல்லாம் சச்சுவுக்குத் தூக்கித் துாக்கிப் போட்டது. எக்கச் சக்கம்ாய் சபேசய்யர் முன்னுல் போய் விழுந்துவிட்டால் படுக்கையில் பிடித்துத் தள்ளி விடுவாரேயென்ற பயத்தில், அவருக்கு டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருவரும் சுற்றிச் சுற்றி வந்தார்கள். துக்கம் இமையை அழுத்தித் தலையைக் கிறுக்கியபொழுது சச்சு குழாயடிக்குச் சென்று குளிர்ந்த நீரை முகத்தில் விட்டுக்கெர்ன் டான். அதை அப்படியே காப்பியடித்தாள் கணகம். -

பின்னல் காலரவம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறபொழுது சபேசய்யர் பின்னுல் நின்று கொண்டிருந்தார். இருவருக்கும் உடம்போடு வெல வெலத்தது.

"இன்னமுமா முழிச்சுண்டுருக்கேள், ஏண்டி?” என்று கேட்டார் சபேசய்யர். -

"அம்பிப் பாப்பாவைப் பாக்கனும்” என்ருள் கனகம். சபேசய்யர் சிரித்துக்கொண்டார்.

"அம்பிப் பயலைக் காலேயிலே பாக்கலாம்மா, இப்பொ ரெண்டு பேரும் படுத்துண்டு தூங்குங்கோ” என்ருர். -

இரண்டு குழந்தைகளும் சேர்ந்து நடந்தன. சபேய்யர். கை களிரண்டும் குழந்தைகளின் தோள்களில் தொட்டும் தொடாமலும் தொட்டுக்கொண்டு படுக்கைவரை வந்தன. -

படுக்கையில் படுத்த பின்பும், அறையிலிருந்து எழுந்த பேரொலி குழந்தைகள் மனத்தைத் தாக்கி, பீதியைக் கிளறிவிட்டுத் தூங்க விடாமல் வருத்திற்று. சச்சு பக்கத்தில் மிக நெருங்கிப் படுத்து கொண்டு அவள் கையைப் பற்றிக்கொண்டாள் கனகம், ஒரு தடவை கோமதியின் அவலக் குரல் மிகப் பயங்கரமாக எழவே, "சச்சு, அம்மா செத்துப் போவாளோ?' என்று கேட்டாள், கனகம்.

"மாட்டா, அம்பிப் பயல் பிறக்கப்போருன்” என்ருள் சச்சு.

"அம்பிப்பயல் பிறந்தப்புறம் அம்மா செத்துப்கோளு, அம்பிப் பயலுக்கு அம்மா இருக்கமாட்டாளே?”