பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடாரி - 3?

யாட்டம இருக்கும். ஐயோடி எனக்குத் தொட்டுப் பாக்கனும்’ என் மூன். - - 3.

குழந்தைகள் ஆசை தீராமல் ஒருவரையொருவர் இடித்துத் தள்ளியபடி, மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“யாருடீ அங்கே?' குரல் இடிபோல் முதுகில் பாயவே, திடுக் கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். சபேசய்யர் நின்றுகொண்டிருந்தார்.

"கழுதைகளா, அங்கெ என்னுது எட்டி எட்டிப் பார்க்கிறேள்?" மூன்று பேருக்கும் வாய் கட்டிவிட்டது.

"என்னுதுடி, என்னுது?” "அம்பிப் பயலைப் பாக்கருேம்” என்ருள் பங்கசம். х "அம்பிப்பயலேப் பாக்கறேளாக்கும்!” ஒரு இழுப்பு, ஒரு ഖങു. குழந்தைகளுக்குப் புரியவில்லை. -

மூன்றும் தலையாட்டின. "அம்பிப் பாப்பா மண்ணுங்கட்டிப் பாப்பா, தெருப்புழுதிப் பாப்பா...போங்கோடி இங்கிருந்து.”

மூன்றும் பின்கட்டை நோக்கித் தெறித்தன. - - வெங்கு அடுக்களையில் நிலையை யொட்டி விசுப்பலகையை ாடுத்துப் போட்டுக்கொண்டு நிர்வாணமாகப் பத்மாசானத்தில் அமர்ந்திருந்தான். இரட்டைமாடி பஸ், நிலைக்கு அந்தப் பக்கம் நின்றுகொண்டிருந்தது. இடுப்புக்கும் பஸ்ஸ்"க்குமான நூல்கயிறு அரையடி உயரத்தில் நிலைவாசலுக்குக் குறுக்கே பாலம் போட் டிருந்தது. செல்லம்மாள் ஒவ்வொரு தடவையும் கயிற்றைத் தாண் டியபடியே அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் போய்க்கொண் டிருந்தாள். . :

சச்சு, பங்கசம், கனகம் மூன்று பேர்களும் முகத்தைத் தொங்கப் போட்டபடியே அடுக்களே வந்து சேர்ந்தார்கள். -

அவர்களேக் கண்டதும் “பாயசம் இன்னும் ஆகலை” என்ருன் வெங்கு. . -

‘மாமி, எங்களுக்கு அம்பிப் பாப்பாவை எடுத்துக் காட்ட மாட்டியா' என்று கேட்டுக்கொண்டே மாமியின் முன்னுல் சென்று தின்ருள் சச்சு. பங்கசமும், கனகமும் மாமியின் பக்கவாட்டில் வந்து நின்றர்கள். . . -

மாமி குழந்தைகளின் முகத்தைப் பார்த்தாள். அவள் கண்கள் நிரம்பின. - - - "அப்புறம் காட்டறேண்டி அம்மா. நீங்க மூணு பேரும் பல் தேச்சுட்டு வாங்கோ” என்ருள். . .