பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடாரி §§

“போகப் போக நேத்து ரொம்ப சிரமப்பட்டுப் போச்சு, பேச்சு மூச்சில்ல்ே, கூப்புட்டாக் கூப்பிட்டா பதிலில்லை. கர்லும் கையும் ஜில்லிட்டுப்போச்சு, கடேசியிலெ தன் போதமில்லாமல்தான் குழந்தை பிறந்தது. அரைமணி நேரம் கழிச்சு கண்ணே முழிச்சுப் பாத்தா, திருதிருனு முழிச்சா, ஆட்டுக்குட்டி மாதிரி, பக்கத்திலே போய், கோமதி, என்னம்மா வேணும்? பெத்துப் பிழைச் சாய் போன்னேன். காதோடெ, மாமி, என்ன குழந்தை?’னு கேட்டா. மாமி, நீங்களே சொல்னுங்கோ? நான் என்ன பதில் சொல்லுவேன்? :எனக்கு அப்படியே தொண்டையை அடைச்சுண்டு நெஞ்சோடு பொருமல் வந்துடுத்து. ஐயோ இந்த ஒண்னும் தெரியாத குழந்தையையுமா பாவி தெய்வம் இப்படிச் சோதிக்கனும்?? -

குஞ்சம்மா கன்னத்தில் கண்ணிர் வழிந்தது. புடவைத் தலைப் பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

"நீங்க வேறே மனசிலெ போட்டுக்காதேங்கோ, உங்க உடம்புக்குத் தாங்காது. பால் ஆறிப்போறது’’ என்ருள் செல்லம்மா, -

குஞ்சம்மாள் பால் தம்ளரை கையில் எடுத்துக் கொண்டாள்.

$o

இன்னிக்கு எல்லாருக்கும் கடுதாசி போட்டாகனுமே, ஒருத்

தருக்கும் போடவேண்டாங்கரு கோமதி, அவளுக்கு அவமானமா இருக்குமாம். இந்தத் தடவையாவது சமத்தா ஒரு ஆண் குழந்தை யைப் பெத்துண்டு வாடீனு சொல்லி யனுப்பிச்சாளும் ஆம்படை யான்காரன். ஏண்டி, இந்த வசையாவது எங்காத்துக்காரர் பெயர் போட முடியுமோடி? மனஸ் இரங்குமா தேவிக்கு?’ என்று ரயில் நகர்ந்ததும் மாமியார்க்காரி கத்தினுளாம். பெண் குழந்தை பிறத்

திருக்குனு தந்தி கிடைச்சதுமே இந்த மூதேவி முகத்திலேயே முழிக்க வேண்டாம்னு தீர்மானிச்சாலும் தீர்மானிச்சுடுவர் அவர்’ என்று சொல்லிக் கொண்டே ஓ’ வென்று அழரு கோமதி..."

குஞ்சம்மா டக்கென்று தம்ளரை கீழே வைத்துவிட்டு இரண்டு காதையும் பொத்திக்கொண்டு, "செல்லம்மா, அப்படிச் சொல் லாதே, அப்படிச் சொல்லாதே. எனக்கு என்னமோ சேறது' என்று

கத்தினுள். - - -

குஞ்சம்மா முகத்தில் பன்னிர் தெளித்தமாதிரி வியர்த்துவிட்டது. காலும் கையும் பரந்தன. செல்லம்மா சரேலென்று தலையைப் பிடித் துக் கொண்டாள். - -

"அப்படியே தலைய8ணயில் சாச் சுடு செல்லம்மா” என்ருள் குஞ்சம்மா. - -

"போயும் போயும் உங்கள் ட்டெ வந்து சொல்றேன் பாருங்க ளேன். இந்த மூடத்துக்கு என்னிக்குத்தான் புத்தி வரப்போறதோ?