பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேவலம் ஒரு காய் ! - 47'

தென்னந் தோப்புக்குள் நுழைந்தபோது திடீரென்று ஒரு தெற் துத் தேங்காய் முன்னே விழுந்தது. கொஞ்சம் மிஞ்சியிருந்தால் துரையின் தலையே பிளந்திருக்கும், அவன் ஆத்திரத்தோடு மேலே திமிர்ந்தான். தேங்காயைத் தள்ளிவிட்ட மந்தி இளித்துக் காட்டிக் குதித்தது. விரைந்து எடுத்தான் வேட்டைத் துப்பாக்கியை. -

குறவன் தடுத்து நிறுத்தி, அதை ஏதாவது செய்தால் ஊர்க் காரர்கள் சும்மா விடமாட்டார்கள் பண்ணேக்காரரை,’’ என்று சாச்சரித்தான். -

சனப்பனூர் மலைக் காட்டு விளிம்பைத் தொட்டு நடந்தார்கள் இருவரும். தன் கால் பக்கம் கறுப்பன் வரும்போதெல்லாம் துரை ஆட்ஸ்காலால் தள்ளிவிட்டுக்கொண்டே வந்தான். கறுப்பன் அதைப் பொருட்படுத்தாமல் கம்பீரமாக முன்னேறிக்கொண்டிருந்தது.

கானகத்தின் அடர்ந்த பகுதி. கடும் வெயிலர் கத்தான் இருந்தது. அதை யார் கவனிக்கிருர்கள்? தரையெல்லாம் அாேந்தெடுக்கப் பட்டுக் கொட்டிக் கிழங்கும் காட்டு வள்ளியும் தெல்லியெடுக்கப்பட்ட அடையாளம் தென்பட்டது. "இங்கேதான் எங்கேயாவது இருக்கும் பன்றி," என்ருன் கன்னியப்பன். -

- உடனே தன் துப்பாக்கியைச் சரிப்படுத்திக்கொண்டான் துரை. - - போடா கறுப்பா, பார்,' என்று கன்னியப்பன் தட்டிவிட்டான் இாயை.

அங்கிருந்த புதர்களேயெல்லாம் இடமறிந்து வைத்திருந்த கறுப் பன் காக்கை முள் புதர் இடுக்கில் தலையைவிட்டுப் பார்த்தது. மறு கணம் வாள் என்று குரைத்துக் குதித்து எகிறியது. நுணுக்க மறிந்த கன்னியப்பன் தன் குத்துக்கோலே அந்த இடத்தில் விட்டு நெம்பினன். வில்லிலிருந்து விடுபட்ட அம்பு போல் குபிரென்று அடர்ந்த புதரினுள்ளிருந்து சீறி வந்தது ஒரு காட்டுப் ó5öᎢ fiy .

ஆகா! கறுப்பன்தான் அப்போது எத்தனே நேர்த்தியாக இடை வெட்டி அதன் கவனத்தைத் திருப்பியது! இப்பொழுது குறவனே விட்டுவிட்டு ஆங்காரத்துடன் கறுப்பன் பக்கமாகத் திரும்பிக்கொண் டது அந்தக் காட்டுப் பன்றி. கன்னியப்பனுக்குப் பக்கத்திலேயே ஒதுங்கிக்கொண்டு இந்தச் சண்டையைத் திகைப்போடு நோக்கிய :படி நின்றுலிட்டது ரோஸி, பங்களா வாயிலுக்கு அழகு செய்யும் அதற்கு இத்தகைய பயங்கர அனுபவம் ஏற்பட்டதில்லே, பாவம்!

கன்னியப்பன் தன் குத்துக்கோலை ஓங்கின்ை. தொலைவிலிருந்த துரை கத்தின்ை. 'டேய், நீ சும்மா இரு.'