பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ்வாலே 5?

நர்ஸ் ஒரு கணம் அவனே வெறித்துப் பார்த்தாள். பிறகு, "உனக்கு உடம்பு பூர்ணமாகக் குணமாக வில்லைபோலிருக்கிறதே. இப்பொழுது நீ பேசவேகூடாது!" என்றதும் சுவரில் தொங்கிய குறிப் பேட்டில் எதையோ கிறுக்கிவிட்டுக் கவுன் சரசரக்க வெளி யேறிஞள். - ..

மாலையில் டாக்டர் வந்தார். அவரைப் பார்த்தவுடன் வேலு மரியாதைக்காக எழுந்து உட்கார முயற்சி செய்தான். காலேயி லிருந்ததை விட இப்பொழுது அவன் முகம் தெளிவடைந்திருந்தது; சற்றுத் தெம்பும் ஊறியிருந்தது. ---

"உடல்நிலை எப்படி இருக்கிறது, வேலாயுதம்?' என்று கேட்டுக் கொண்டே டாக்டர் கட்டுக்களேயும் நாடியையும் பரிசோதித்தார்.

'உடம்பு தேவலீங்க. ஆணுல் மனசுதான் சரியில்லே. என் னென்னவோ எண்ணங்கள் தோன்றி மனசு ரொம்பவும் கஷ்டப்படு துங்க’’ என்ருன் வேலு வெகுளியாக.

டாக்டர் மெல்லச் சிரித்தார். சிரிக்கும்போது முகத்தில் விழுந்த சுருக்கம் அவருக்குக் குறைந்தது நாற்பது வயதாவது இருக்கும் என்று மதிப்பிடத் தோன்றியது. வேலுவுக்கு அவர் கூறிய பதில் அவருடைய ஆழ்ந்த அநுபவத்தைப் பறைசாற்றியது: "எனக்குக் கூடத்தான் மனம் சரியாக இல்லை. நம்முடைய கடமையில் நாம் முன்னேறும்போது கவலைகள் மனத்தை விட்டுத் தானுகவே அகன்று விடுகின்றன. இல்லையா, வேலாயுதம்? நான் சொல்வது சரிதானே?"

"ஆமாங்க...உ.ம்...ஒரே ஒரு விஷயம் உங்ககிட்டே கேட்கனும், என்னுடைய டாக்ஸியில் பிரயாணம் செய்த அம்மாள்...?"

'விபத்து நடந்த இடத்திலேயே...!"

"என்ன? இறந்துவிட்டார்களா? ஐயையோ, நான் கட்டின கோட்டை யெல்லாவற்றையும் இடிச்சுத் தள்ளிப்பிட்டேனே பா...வி!' - - - - -

"அந்த அம்மாளே உனக்கு எப்படித் தெரியும், வேலு?"

'நல்லாக் கேட்டிங்க, டாக்டர்! அந்த அம்மாளைப பார்த்துப் பேசக் கொடுத்து வைச்சிருக்கனுமே, டாக்டர். அந்தச் சிரிச்ச முகமும், கொள்ளே கொள்ளும்,அழகும்... அது ஒரு தெய்வப் பிறவிங்க. நான் முன்னேயே நினைச்சேன். இத்தனே அழகு ஜ்வாலே விட்டெரி யுதே மனுசனே எரிச்சுடுமேன்னு. ஆனுல் அது தன்னேயே எரிச்சுக் கிடுத்து. ஒரு வேளை அன்னிக்கு அவங்க ரயில்லே போயிருந்தாங் கன்ன ரயிலே கீழே விழுந்து அந்த ஆளு பொசுங்கிப் போனுலும் போயிருப்பாங்க. அது ஆளே எரிக்கும் அழகு!" -

'யாரப்பா அந்த மற்ருெரு ஆசாமி?’ டாக்டரின் குரலில் ஒலித்த நடுக்கத்தை வேலு கவனிக்கவில்லை. அதனுல் அவன் எத்தகைய பாதகம் செய்துவிட்டான்?