பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ பாம் கடல்

இந்தக் கடிதத்தைத் தன் தகப்பணுருக்கு அனுப்பிவிட்டு, கேச வன் அன்றைக்கே தன் அறையைக் காலி செய்துகொண்டு பம்பாய்க் குச் சென்றுவிட்டான். அங்கு அவனது நண்பன் ஒருவனின் உதவி ய்ால் ராணுவத்தில் சேர்ந்துவிட்டான். -

நாலந்து வருஷங்கள் சென்றுவிட்டன. கேசவன் இப்பொழுது தாணுவ இலாகாவில் ஒரு அதிகாரி. அவனுடைய முரட்டுப் பிடிவிர்த குன்ம் அந்த இலாகாவில் படிப்படியாக விரைவில் முன்னுக்கு வரப் பெரிதும் உதவியாயிருந்தது. முன்பு எந்தக் குணம் அவனுக்கு ஒரு பெரிய குறையாயிருந்ததோ, அந்தக் குணமே இப்பொழுது அவ்ன் இலாகாவில் அவனுக்கு மிகவும் நல்ல பெயரைக் கொடுத்தது: கண் டிப்பும், கருருமாக இருந்து மேலதிகாரியின் தயவை அவன் வெகு விரைவிலேயே பெற்றுவிட்டான். -

இந்திய ராணுவத்தில் சேர்ந்து திறமையாகச் சேவை புரிந்து நல்ல பெயருடன் தாய் நாடு திரும்பினன், ஜபல்பூருக்கு வந்து சேர்ந்ததுந்தான் அவனுக்குத் தாய்நாட்டின் நினைவு, மீண்டும் பிறந்த நாட்டைப் பார்க்க வேண்டும் என்னும் ஒர் ஆர்வம் எல்லாம் திரும் பின. அதற்கு ஏற்றற்போல், அவன் தங்கியிருந்த தென்னிந்தியப் பிரமுகர் வீட்டுக்கு வந்த பத்திரிகையில் காணப்பட்ட விளம்பரம் அவனைத் தென்னிந்தியாவுக்கே தூக்கிச் சென்றுவிட்டது.

- முக்கிய அறிவிப்பு திருச்சி ஜில்லா, முசிரி தாலுக்காவில் பெரிய மிராசுதாராயிருந்த வேதராமன் மூன்று மாதங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். அவரது ஏகபுத்திரளுகிய தேசவன் குடும்பத்தை விட்டுப் பல வருஷ்ங்களுக்கு முன்பே வெளியேறிவிட்டார். அவர் இந்த விளம்பரத்தைக் கண்ட் தும் தம்மைத் தகுந்த முறையில் ருசுப்படுத்திக்கொண்டு தந்தையின் சொத்துக்கு உரியவராகலாம். - -

இப்படிக்கு, ஜம்புநாதன், - - - - வக்கீல். இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் கேசவனுக்குத் தன் பழைய தினேவுகளெல்லாம் மனக்கண் முன் தோன்றின. - - -

அப்பா இறந்துவிட்டாரா? அவர் மறு விவாகம் என்ன வாயிற்று...? நிச்சயம் அது நடந்திருக்கும். பின்பு அவள் என்ன வானுள்? சரி, என்னவா யிருந்தாலும் ஊருக்குப் போய்ப் பார்த்தால் தெரிந்துவிடுகிறது!’ என்று மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு கேசவன் அன்றைய தினமே ஊருக்குப்புறப்பட்டுவிட்டான். -

கருக்கு வந்து சேர்ந்து தன்னை ருசுப்படுத்திக்கொண்டு சொத்துரிமையைப் பெறுவதில் கேசவனுக்குச் சிர்ம்ம் சிறிதுக்