பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

667 லோசனி 68

இருக்கவில்லை. வக்கீல் ஜம்புதாதனுக்குக் கேசவனச் சிறு பிராயம் முதல் நன்ருய்த் தெரியுமாதலால், அவனைக் கண்டதும் மகிழ்ச்சி ஷ்டன் அவனுக்கு உரிய சொத்துக்களை அவனது உடைமையாக்கினர்.

இந்த விவகாரங்களெல்லாம் ஒருவாறு முடிந்ததும், கேசவன் தன் பூர்வீக வீட்டில் புகுந்து ஆராய்ச்சி செய்தான். விலை உயர்ந்த கட்டில், மேஜை, பீரோக்களெல்லாம் ஒழுங்காக வைக்கப்பட் டிருந்தன. .

கேசவன் வியப்புடன் யாவற்றையும் ஆராய்ந்தான். அச்சமயம் வக்கீல் உள்ளே வந்து, "மிஸ்டர், கேசவன், இதோ உங்கள் தகப்ப ஞரின் உயில். அதை ஒரு முறை கவனமாகப் பார்த்துக்ககாள்ளுங் கள்' என்று கூறி அவனிடம் உயில்ேக் கொடுத்தார்.

கேசவன் அதை வாங்கிக் கவனமாகப் பார்த்தான். அதில் சொத்து முழுவதற்கும் அவனேயே உரிமையாக்கி யிருந்தது. உயி லின் ஷரத்துக்களைப் படித்தபோது அவன் துள்ளிக் குதித்தான். கிமாதம் ஐம்பது ருபாய் அவன் சித்திக்கு அனுப்பி வைக்கும்படி அதில் அவன் தகப்பனர் எழுதியிருந்தார். கன்னியா குமரியிலிருந்த அவன் சித்தியின் விலாசமும் கொடுக்கப்பட்டிருந்தது. - அவனுக்குச் சிறிதும் விருப்பம் இல்லாவிட்டாலும் உயிலின் வாசகப்படி கேசவன் ஒவ்வொரு மாதமும் சித்திக்குப் பணம் அனுப்பி வந்தான். நாலைந்து மாதங்களுக்கெல்லாம் அது அவன் மனத்தை உறுத்துவதற்கு ஆரம்பித்தது. உடனே பணம் அனுப்புவதை அவன் நிறுத்திவிட்டான். . . .

- ★ அன்று வந்த கடிதம் அவனே மிகவும் சலனப்படுத்தி விட்டது. கேசவன் இதுவரையில் தன் கல்யாணத்தைப் பற்றியோ, குடும்ப வாழ்க்கையைப் பற்றியோ நினைத்துப் பார்த்ததேயில்லை. அதைப்பற்றி யெல்லாம் நினைத்துப் பார்க்க அவனுக்குச் சந்தர்ப்பமே கிடைத்ததில்லை. இப்பொழுது அவனையும் அறியாமல் அவன். உள் கிாத்தில் மணவாழ்க்கையைப் பற்றிய இன்ப நினைவுகள் இலேசாக இழையோடின. அதைத் தகர்த்தெறிய அவன் எவ்வளவோ முயன்றும் அவளுல் இயலவில்லை.

முத்தான கையெழுத்தில் அன்று வந்த கடிதம் அவன் உள்ளத் தில் ஒரு புத்துணர்ச்சியை எழுப்பியது. அதை யார் எழுதியிருப் பார்கள்? நிச்சயம் ஒரு பெண்மணிதான் எழுதியிருக்கவ்ேண்டும். கையெழுத்தில் பெண்மையின் பூரண எழிலும் ததும்பி நிற்கிறதே! என்று கேசவன் சிந்திக்கலாஞன். அவன் சிந்தனையின் நடுவே ஒவிய எழில் கொண்ட ஒரு பெண்மணியின் உருவம் நிழலாடியது. ஆலுைம் அவன் மனம் மட்டும் உறுதியாயிருந்தது. சித்தியின் விஷயத்தில் அவன் தன் அபிப்பிராயத்தைச் சிறிதும் மாற்றிக்கொள் ளத் தயாராயில்&ல. - - - - : -