பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“96 பால காண்டப் இந்தக் காலத்தில் பெண்கள் பந்தாடுவது குறைந்து, ஆடவர் பந்தாடுவது மிகுந்து விட்டது. அந்தக் காலத்தில் பெண்கள் பந்தாடியதாகவே இலக்கியங்கள் கூறியுள்ளன. எனவே, பந்தினைப் பயில் இடம் என்பதைக் கொண்டு இளையவர்' என்பது பெண்களைக் குறிக்கும் என்பது பெற்றாம். இலக்கியச் சான்றுகளும் காண்போம்: - மிக்க வலிமையுடைய பேரரசர்கள், பகைவர்களைப் பெண்களாகக் கருதி, அரண்மனை வெளிவாயிலில் பந்தும் பாவையும் (பதுமையும்) கட்டித் தொங்கவிட்டிருப் பார்களாம். பகைவர்கள் வரின், பந்தையும் பாவையையும் எடுத்துக் கொண்டு விளையாடலாம் என்ற கருத்தில் இவ்வாறு செய்வார்களாம். இதனை நக்கீரர், தமது திருமுருகாற்றுப் படை நூலில், தமது ஊராகிய மதுரை யைச் சிறப்பித்துக்கூறுங்கால் குறிப்பிட்டுள்ளார்.-மதுரை யில், பாண்டிய மன்னனது வாயிலில், கொடிகளோடு பந்தும் பாவையும் கட்டித் தொங்க விடப்பட்டுள்ளனவாம். பாடல் பகுதி: 'செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பத்தொடு பாவை துரங்கப் பொருநர்த் தேய்த்த போரறு வாயில்' (67–69) மற்றும், இச்செய்தி தணிகைப் புராணத்தில், 'பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும் பலவும் சென்நெறிகிற்கு முந்தை மாதரை இயற்றுபு பின்றைமொய்ப் பகழி வாயிலில் தூக்கி' (சீபரிபூரணம்-68) எனவும், திருநாகைக் காரோணப் புராணத்தில், "பகைவரைப் பாவைமா ரெனத் தெரிப்பப் பங்தொடு பாவைகள் தூங்கித் தகைசிறி தறியா வாயில்சா னாஞ்சில் . தடப்பெரு நொச்சியும்' (திருநகரப் படலம்-90)