பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 97" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. (தூங்குதல் = தொங்குதல்) "வரிப்புனைபந்தொடு பாவைதூங்க' என்னும் திருமுரு காற்றுப் படை அடிக்குப் பரிமேலழகர் பின் வருமாறு உரைவிளக்கம் தந்துள்ளார். 'நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும் பாவையும் அறுப்பாரின்மையின் தூங்கியே விடும்படி-என்றது, பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்குத் தூக்கின என்றவாறு ?? எனவே, கம்பரது பாடலில் உள்ள இளையவர். என்பது ஆடவ இளைஞரைக் குறிக்காமல் பெண் இளையவரையே குறிக்கும். இளையார் என்பதும் அன்னதே. இலக்கியச் சான்றுகள்:

  • இளையவர் வயப்பட்டிருந்து (தேவாரம்- 462-9) *இளையார் குழாத்திடையாள்' (சீவக சிந்தாமணி-2585)

'துளையார் கருமென் குழல் ஆய்ச்சியர்தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா இளையார் விளையாட்டொடு காதல்வெள்ளம் விளைவித்த அம்மகன் இடம்...' (பெரிய திருமொழி-3-8-8) எனவே, பந்தினை இளையவர் பயில் இடம்; என்பதற்குப் பெண்கள பந்து ஆடும் இடம் என்பது பொருள் ஆகும். அடுத்தது:-பெண்கள் பந்தாடும் இடம், சந்தன வனம் அல சண்பகவனமாம்” என்பதன் கருத்தாவது:பெண்கள் சந்தன வனத்தில்தான் பந்தாடுகின்றனர், அங்ங்னம் இருந்தும், அவர்கள் மீது சண்பக மலரின் மணம வீசுவதால், சந்தன வனமல-சண்பகவனமாம்” என்று மாற்றிக் கூறப்பட்டுள்ளது. பெண்களின் மீது. சண்பக மணம் வீசுவதாகக் கூறல் மரபு. சண்பகம்,