பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பால காண்டப் பட்டுள்ளது. சான்றுகள்:- நம்மாழ்வாரின் திருவாய் மொழியில்: குைழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை பழகியாம் இருப்போம் பரமே இத்திருவருள்கள் அழகியார் இவ்வுலகம் மூன்றுக்கும் தேவிமை தருவார் பலருளா கழகம் ஏறேல் நம்பி உனக்கும் இளைதே கன்மமே” (கழகம் = திருவோலக்கம் - 6.2-6) பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தில்: கண்ணுதல் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பகங் தமிழ் ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ'(57) இந்தக் காலத்தில் இலக்கிய மன்றங்களையும் கல்வி நிறுவனங்களையும் செந்தமிழ்க் கழகம், பல்கலைக் கழகம் என்றெல்லாம் அழைக்கின்றோம். இவ்வாறாக, கழகம் என்பது, அன்று தொட்டு இன்றுவரை, இரு துருவங்கள் போல் உயர்வாகவும் தாழ்வாகவும் கூறப்பட்டிருப்பதில் உள்ள உண்மை யாது? இதைக் கண்டு பிடிக்கத் துணை புரியும் சேந்தன் திவாகர நிகண்டில் உள்ள நூற்பா ஒன்று. வருமாறு (இடப் பெயர்த் தொகுதி-160): செல்லல் தீய்க்கும் பல்புகழ்ச் சேந்தனில் வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும் மல்லும் சூதும் படையும் மற்றும் கல்விபயில் களமும் கழகம் ஆகும்: இந் நூற்பாவில், நாவலர் (அறிஞர்கள்) கூடும் இடம், மற்போர் பயிலும் இடம், சூதாடும் இடம், படைப் பயிற்சி பெறும் இடம், கல்வி பயிலும் இடம் ஆகியவை கழகம்’ எனக் கூறப்படும் என்ற கருத்து உள்ளது.