பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பால காண்டப் கலைதெரி இளைஞர்க்குக் கந்தன் (முருகன்) உவமை யாக்கப்பட்டுள்ளான்; பந்தினை இளையவர்' என்னும் கம்பரின் பாடலில் இவ்வளவு சிறப்புகள் பொதிந்திருப்பது உவகை ஊட்டுகிறது. செவி நுகர் கனிகள்: மாலைகள் தேனைச் சொரிகின்றன. பாதைகள் (வழிகள்) மாணிக்கமும் பொன்னும் சொரிகின்றன. காற்றுகள் குளிர்ச்சியாகிய அமிழ்தத்தைச் சொரிகின்றன. பழைய காப்பிய நூல்கள் செவி உண்ணும் கருத்துக் கனிகளை இசையுடன் சொரிகின்றன. கோதைகள் சொரிவன குளிர் இள நறவம் பாதைகள் சொரிவன பருமணிகணகம் ஊதைகள் சொரிவன உயிர் உறும் அமுதம் காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்' (51) இளநறவம் என்பது புதுப் புதுத் தேனைக் குறிக்கின் றது. பாதைகளில் செல்பவர்கள் மணிவகைகளையும் பொன்னையும் சிந்திச் செல்கின்றனர்- அவற்றை எடுப்பார் எவரும் இலர். இது நாட்டின் செல்வச் சிறப்பைக் குறிக்கிறது, ஊதைகள் (காற்றுகள்) எனக் காற்று பன்மை யில் கூறப்பட்டிருப்பதில் உள்ள நுட்பமாவது :-கிழக்கே யிருந்து வரும் கொண்டல் காற்றும், தெற்கேயிருந்து வரும் தென்றல் காற்றும், மேற்கேயிருந்து வரும் கோடைக் காற்றும், வடக்கேயிருந்து வரும் வாடைக் காற்றும் எனக் காற்று நால்வகைப்படும் என்பதாம். நால்வகைக் காற்றுகளும் நுகர்வில் வேறுபடுவன எனினும், கோசல நாட்டில் எல்லாமே அமிழ்தம் போன்ற இனிமை யையே செய்கின்றன என்பது கருத்து. காப்பியங்கள் கனி போன்ற செவியுணவாகிய உயரிய கருத்துகளை அளிக்கின்ற னவாம். வள்ளுவர் கேள்வியைச செவியுணவு' என்று கூறி யிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. இது நாட்டினரின் கல்வி கேள்விச் சிறப்பை உணர்த்துகிறது.