பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பால காண்டப் என்னும் பகுதியும் தக்க சான்றுகளாகும். இத்தனை நூல் கருத்துகளையும் உள்ளத்தில் கொண்டிருந்த கம்பர், 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' என்னும் அழகுடன், அன்றிலோடு ஒத்தி என இரணடே சொற்களால் அறியச் செய்து மகிழ்வித்துள்ளார். உலாவியல் படலம் யாரே கண்டார்? இராமன் தெருவில் உலாச் சென்றபோது, மங்கையருள் சிலர் தோள்களை மட்டும்- சிலர் தாள்களை மட்டும்சிலர் கைகளை மட்டும் கண்டனர். கடவுளின் ஒவ்வொரு நிலையை மட்டும் காணும் சமயவாதிகள் போல், இராமனை யாரும் முழுமையாய்க் காணவில்லை. தோள் கண்டார் தோளே கண்டார்; தொடு கழல் கமல மன்ன தாள் கண்டார் தாளே கண்டார்; தடக்கை கண்டாரு ம.தே. வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்' (19) எந்தச் சமயத்தவரும் இன்னும் கடவுளின் முழு நிலையையும் கண்டிலர்; ஒவ்வொருவரும் ஒவ்வோர் இயல்பினை மட்டுமே கூறிக் கொண்டுள்ளனர்- என்னும் கருத்து எண்ணுதற்கு உரியது. கல்வியினால்: இராமன் திருப்பெயரை உருவேற்றும் ஒருத்தி, இராமன் வில்லை ஒடித்தது, சீதையை மணக்க வேண்டும் என்னும் காம உணர்வினால் அன்று; தன் வில்பயிற்சியின்