பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 133 திறமையைக் காட்டுவதற்காகவே ஒடித்திருக்க வேண்டும் என்று கூறினாள்: 'நாமத்தால் அழிவாள் ஒரு நன்னுதல் சேமத்தார் வில் இறுத்தது, தேருங்கால் தூமத்தார் குழல் துன்மொழித் தோகையால் காமத்தால் அன்று, கல்வியினால் என்றாள்' (39) இப்பாடலில் வில் பயிற்சியும் ஒருவகைக் கல்வியாகக் கூறப்பட்டுள்ளது எண்ணத் தக்கது. ஈண்டு, நாட்டுப் படலத்தில் கந்தனை அனையவர் கலை தெரி கழகம்’ என்னும் அடியைக் கொண்ட பாடலுக்குக் கூறப்பட்டுள்ள விளக்கத்தைத் திரும்பவும் காண வேண்டும். சோளர்: இராமன்- சீதை ஆகியோரின் திருமணம் காணப் பல நாட்டு மன்னர்களும் மிதிலைக்கு வந்தனராம். அவர்களுள் சிலரைக் காண்பாம்: 'கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள் சிங்க ளாதிபர் சேரலர் தென்னவர் அங்கர் சீனர் குலிங்தர் அவந்திகர் வங்கர் மாளவர் சோளர் மராடரே' (46) இந்தப் பாடலில், தமிழ் மன்னர்களுள், சேரர் சேரலர் எனவும், பாண்டியர் தென்னவர் என்றும், சோழர் சோளர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். சோழர் சோளர் எனப் பட்டிருப்பதின் அடிப்படையில், ழகர ளகர மாற்றொலி பற்றி ஒரு சிறிய ஆய்வு செய்யலாம்: வட தமிழ் நாட்டார்க்கு ஒத்த ஒலிப்பில் ல, ள - என்னும் இரண்டெழுத்துகள் உள்ளன. தென் தமிழ் நாட்டார்க்கு ஒத்த ஒலிப்பில் ல, ள, ழ என மூன்று உள்ளன. குழறுதல்-குளறுதல் என்ற மாற்றொலியும், உழுந்து-உளுந்து, என்ற மாற்றொலியும், திகழ் தசக்கர Լյfr-9