பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 9 வேறுபாடுகள் கொண்டுள்ளார். அடிப்படையான பெரிய வேறுபாடாவது: வால்மீகி இராமனையும் சீதையையும் மக்கள் போல் கொண்டிருக்க கம்பரோ, இருவரையும் திருமால்-திருமகள் ஆகியோரின் தெய்வப் பிறவிகளாகக் கொண்டு அதற்கு ஏற்பக் கதையை அமைத்துக் கொண்டு சென்றுள்ளமையாகும். மற்றுமொரு வேறுபாடு காணலாம்: இராவணன் சீதையை உடலைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போனதாக வால்மீகி அறிவித்திருக்க, கம்பரோ, சீதை இருந்த குடிலை அடியோடு அகழ்ந்து சீதையைத் தீண்டாமல் குடிலோடு இராவணன் தூக்கிக் கொண்டு சென்றதாகக் கூறியுள்ளார். கதையின் இடையிடையே இருவர்க்கும் சிறு சிறு மாறுபாடுகள் பற்பல உண்டு. அவர் சொன்னதை இவர் விட்டிருப்பார்...அவர் சொல்லாததை இவர் சொல்லி யிருப்பார். புனைவுகளில் இருவரிடையே ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். ஒரு கதையைப் பலர் எழுதும்போது, இவ்வாறு சில அல்லது பல வேறுபாடுகள் அமைவது இயற்கை. கம்பரின் காலம் கம்பர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டினர் எனச் சிலரும், பன்னிரண்டாம் நூற்றாண்டினர் எனச் சிலரும் கூறுகின்றனர். எனது கொள்கை இரண்டாவதேயாகும். (இது குறித்து எனது 'அம்பிகாபதி காதல் காப்பியம்’ என்னும் நூலின் முன்னுரையில் விரிவாக எழுதியுள்ளேன்). பைம் பொழில் பொருள்கள்: பாலகாண்டப் பைம்பொழிலில் எண்ணிறந்த நறுமண மலர்களும் சுவைக் கனிகளும் உள்ளன. இனி அவற்றுள் சிலவற்றை அணிந்தும் நுகர்ந்தும் மகிழலாம்.