பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாயிரம் பாயிரம் என்பது இப்போது நூல் எழுதுபவர்கள் ஆசிரியர் முன்னுரை' என்னும் பெயரில் எழுதுகிறார்களே அது போன்றது. இந்தப் பகுதியில், ஆசிரியர் கம்பர், கடவுள் வாழ்த்தும் அவையடக்கமும், நூல் வழியும், நூல் எழுதிய இடமும், நூல் பெயரும், தம்மை ஆதரித்தவர் பெயரும் கூறியுள்ளார். இவற்றை முறையே காண்பாம். கடவுள் வாழ்த்து - உலகம் முழுவதையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களும் புரியும் தலைவர் எவரோஅவர்க்கு நாங்கள் அடைக்கல மாவோம். 'உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவர்; அன்னவர்க் கேசரண் நாங்களே” (1) கம்பர் தம்மைப் பற்றி மட்டும் கவலைப்படாமல் மற்றவர்களையும் உள்ளடக்கி நாங்களே' என்று கூறி யிருப்பது, அவரது உயரிய பண்பை அறிவிக்கிறது. பின்னால் கடவுள் பெயர் குறிப்பிடப்படினும், முதல் பாடலில் வெளிப்படையாக ல்ெலாமல் பொதுவாகக் கடவுள் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதும் எண்ணத் தக்கது. முத்தொழிலும் அவர்க்கு ஒரு விளையாட்டாம். இந்தப் பாடலில் ஒவ்வோர் அடியிலும் நான்கு சீர்கள் உள்ளன. ஒவ்வொரு சீரிலும் உள்ள மெய்யெழுத்தை